சென்னை | ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

சென்னை: இருசக்கர வாகனத்தை ஓட்டி வருபவர் மட்டுமின்றி, பின்னால் உட்கார்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருந்தால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீஸார் லட்டு வழங்கினர். இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணிவது இல்லை. இதனால், போக்குவரத்து போலீஸார் அபராத நடவடிக்கையை அவ்வப்போது தீவிரப்படுத்தி வருகின்றனர். தவிர, இருசக்கர வாகனங்களில் செல்லும் 2 பேரும் … Read more

மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் நாற்காலி வீசப்பட்டதால் சலசலப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில், திமுக – அதிமுக கவுன்சிலர்கள் இடையே நேற்று வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் மீது நாற்காலி வீசப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீஸாரிடம் புகார் அளித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம், அதன் தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக பேசினர். அப்போது, மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் … Read more

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை தகவல்

கரூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கரூரில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெரம்பலூரில் பாஜக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர். இதுபோன்ற வன்முறையைக் கண்காணிக்கத்தான், பாஜக தலைமையிடக் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் மேலிடத்தில் இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். காவிரிப் பிரச்சினையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக … Read more

பாஜகவினர் மீது தாக்குதல்: இபிஎஸ், அண்ணாமலை கடும் கண்டனம்

சென்னை: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து அமைச்சரின் உதவியாளர் மற்றும் திமுக எம்எல்ஏவின் உதவியாளர் உள்ளிட்ட 300 பேர் நுழைந்து, கல் குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுகவினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளிபெறக்கூடாது என்றும் … Read more

சென்னை: ’இறந்த குழந்தைக்கு சிகிச்சை’ பிரபல தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் ஏற்கனவே இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பத்து லட்சம் கட்டணம் வசூலிக்க முயன்றதாக குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டியதுடன், மருத்துவமனையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   

திருப்பூர் காந்தி சிலை முன் ஆளுநருக்கு எதிராக வாசகம்: போலீஸார் தீவிர விசாரணை

திருப்பூர்: திருப்பூர் காந்தி சிலை முன் ஆளுநருக்கு எதிரான வாசகம் எழுதப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி அருகே மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலையின் பீடத்தை ஒட்டிய சுவரில், `வெளியே போ கவர்னர் ரவி’ என கருப்பு எழுத்துகளால் எழுதப்பட்டிருந்தது. இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்தபடி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு … Read more

பழனிசாமி காரை நோக்கி கல் வீசியதாக 2 பேர் கைது

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் காரை நோக்கி கல் வீசியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் நேற்று முன்தினம் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பின்னர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். Source link

பாஜகவினர் மீது திமுகவினர் சரமாரி தாக்குதல்: அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினரை திமுகவினர் தடுத்து நிறுத்தி தாக்கியதுடன், சுரங்கத் துறை அலுவலகத்தில் பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர். தடுக்கவந்த போலீஸார், அரசு அலுவலர்களும் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கவுள்பாளையம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், கல்பாடி, திருவளக்குறிச்சி, செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 31 கல் குவாரிகளுக்கான மறைமுக ஏலம் நேற்று (அக்.31) நடைபெறுவதாகவும், இதற்காக … Read more