திடீரென வந்து விழுந்த பணம்: மறுக்காத செந்தில் பாலாஜி – இறுக்கி பிடித்த அமலாக்கத்துறை !

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் மே 14ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவேரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை மற்றும் ஓய்வு முடிந்த பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி இந்நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன: அரசு தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் முதல்வர் ஸ்டாலினால் கடந்த 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக … Read more

அடுத்த காங்கிரஸ் தலைவர் இவர்தான்? – டெல்லி டிக் அடித்த பெயர்!

தமிழ்நாடு காங்கிரஸுக்கு புதிய தலைவர் இப்போது வருகிறார், அப்போது வருகிறார் என்ற செய்திகள் வெளிவந்த நிலையில், இப்போது அது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் சந்தித்தது. மூன்று வகை தேர்தல்களிலும் காங்கிரஸ் கணிசமான அளவு வெற்றிபெற்றது. கே.எஸ்.அழகிரி மாற்றம்? இதனிடையே சில ஆண்டுகளாகவே தலைவர் பதவியில் … Read more

தமிழகத்தில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் திட்டம் இல்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: தமிழகத்தில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் திட்டம் இதுவரை இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பாபநாசம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தாமிரபரணி ஆற்று பாசனம் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தாமிரபரணியில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து வடக்கு கொடை மேலழகன் கால்வாய், தெற்கு கொடை மேலழகன் கால்வாய், நதியுண்ணி அணைக்கட்டு மற்றும் … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை… மத்திய அரசு வெளியிட்ட புது அறிவிப்பு..

இப்போது வரும், அப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைகளை சுற்றி சர்ச்சைகள் இன்னும் சர்ச்சைகள் சுழன்ற வண்ணம்தான் உள்ளன. தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மதுரை எய்ம்ஸுடன் அறிவிக்கப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், மதுரை … Read more

கோவை | பணியிட மாறுதல் கோரி குழந்தையுடன் காலில் விழுந்த ஓட்டுநர் – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்

கோவை: தனது 6 மாத குழந்தையுடன் கோவையில் போக்குவரத்துத்துறை அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநருக்கு சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கண்ணன் தனது மனைவி, குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்த நிலையில், அவரது மனைவி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், … Read more

மக்களவை தேர்தல் சர்வே முடிவுகள் 2024: தமிழகத்தில் யாருக்கு வெற்றி? சீட், வாக்கு சதவீத விவரங்கள்!

2024 மக்களவை தேர்தலில் மத்தியிலும், தமிழகத்திலும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தற்காலிக தீர்வு சொல்லும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. சிக்ஸர் அடித்த எதிர்கட்சிகள்..சிக்க வைக்கும் பாஜக – NDA vs INDIA கருத்துக்கணிப்பு முடிவுகள் சமீபத்தில் இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வந்தது. இந்நிலையில் டைம்ஸ் நவ் – இடிஜி பவுண்ட் … Read more

நாமக்கல் | முதியவரை ஏளனமாக பேசிய வங்கி – ரூ. 34,500 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

நாமக்கல்: 2018-2023 வரையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 35,000 கோடி அபராதம் வசூலித்ததாக சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதுபோன்ற வழக்கில், வங்கி வாடிக்கையாளருக்கு ரூ. 34,500 இழப்பீடு வழங்க, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளிள்ளது. கோவை, வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவரது மனைவி யசோதா (62). இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017 மே மாதத்தில் … Read more

வெளுத்து வாங்கிய கனமழை… இன்னும் தொடருமாம்.. வானிலை அலெர்ட்..

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடைக்காலம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர். வெப்பத்துடன் வெப்ப அழுத்தமும் அதிகமாக இருந்ததால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு புழுக்கத்திற்கு ஆளானார்கள். சென்னை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்வதால் இதமான சூழல் நிலவி வருகிறது. வானிலை ஆய்வு மையமும் அடுத்த ஒரு வாரத்திற்கு அநேக … Read more

ராமநாதபுரம் | அக்காள்மடம் மீனவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டம், பாம்பன் ஊராட்சி, அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று, அங்குள்ள மீனவர் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நாளை (18.8.2023) நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரத்திலிருந்து … Read more