இனி கொடைக்கானலில் இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை!

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன் மர சோலை சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து எதிரொலி காரணமாக இன்று முதல் சுற்றுலா தலங்கள் செல்ல தற்காலிகமாக தடை-வனத்துறை அறிவிப்பு.  

தமிழகம் முழுவதும் ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: காலை உணவு திட்டம் வரும் ஆக.25-ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுவதாக சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாட்டின் 77-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 3-வது முறையாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சுதந்திர தின உரை நிகழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் இயங்கிவரும் … Read more

சுதந்திர தினத்தில் முதல்முறையாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற 3-ம் வகுப்பு மாணவன்

சென்னை: சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் நீதிபதிகள், முன்னாள், இன்னாள் அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் முதல்முறையாக, அரசின் சிறப்பு அழைப்பாளராக 3-ம் வகுப்பு மாணவர் லிதர்சன் அழைக்கப்பட்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பாப்பனம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் லிதர்சன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னையில் நடக்கும் சுதந்திர தின கொடியேற்று … Read more

ஃபயாஸ்தின் ஏன் அப்படி பேசினார்? அனிதா டூ ஜெகதீஷ்… நீட்டை தெறிக்கவிட்ட இளம்குரல்!

”நான் சுயநலவாதியாக இருந்துட்டா பின்னாடி ஒரு துயரம் வரும் போது யாரும் வரமாட்டாங்க. இந்த சமூகத்திற்காக ஒருமுறை யோசிக்க ஆரம்பிச்சிட்டா, இப்படி தான் பேசத் தோணும். உங்களுக்கு ஒன்னுன்னா நான் வருவேன். எனக்கு ஒன்னுன்னா நீங்க வருவீங்க”. இப்படி நீட்டிற்கு எதிராக ஓர் இளம் குரல் ஆவேசமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அவரது பெயர் ஃபயாஸ்தின். ​தொடரும் நீட் மரணங்கள்சமீபத்தில் நீட் தேர்வால் தனது மருத்துவக் கனவு பறிபோன நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரனும், அவனது தந்தையும் அடுத்தடுத்து உயிரை … Read more

சென்னை கோட்டையில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர்

சென்னை: சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக கோட்டை அருகே முதல்வரை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். அப்போது, தென் இந்திய பகுதிகளின் தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார், கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் திங்ரா, தாம்பரம் விமானப் படை அதிகாரி ஏர் கமாண்டர் ரத்தீஷ் குமார், கிழக்கு மண்டல கடலோர காவல் படை அதிகாரி ஆனந்த பிரகாஷ் படோலா, தமிழக டிஜிபி … Read more

இன்னும் ஒரு வாரம் மழை தான்: வானிலை ஆய்வு மையம் சூப்பர் தகவல்!

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் அதிகபட்சமாக சத்தியார் 7 செ.மீ, வாலாஜாபாத் 6 செ.மீ, திருமங்கலம், கலவை (ராணிப்பேட்டை) காட்டுகுப்பம், காட்பாடி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக … Read more

‘இந்தியாவை பீடித்துள்ள பிணியை அகற்றுவோம்’ – முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், ‘மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலை உயர்வு என 9 ஆண்டுகளாக இந்தியாவை பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும்,வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்’ என தெரிவித்துள்ளார். சுதந்திர உரையின்போது அவர், ‘‘மக்களுக்கு நேரடி தொடர்பு கொண்ட அனைத்தும், குறிப்பாக கல்வி, மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் நீட் … Read more

சுங்கச்சாவடிகளில் பகல் கொள்ளை.. பரனூர்தான் டாப்.. ரூ. 28 கோடி.. சிஏஜி அறிக்கையில் அம்பலம்!

மத்திய கணக்கு தணிக்கை குழுவான சிஏஜி சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகள் விதிகளை பின்பற்றாமல் 132 கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாக சுங்கக் கட்டணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச்சாலையை மேம்படுத்தும் போது கட்டணத்தை மாற்றி அமைக்காமல் கட்டணத்தில், 75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் … Read more