"மதுரைக்கு இல்லப்பா.. திருச்சிக்கு தான் ஸ்கெட்ச்சு".. இன்னைக்கு நைட்டு வெச்சு செய்ய போகும் மழை

திருச்சி: மதுரையை விடாமல் துவசம்சம் செய்து வந்த மழை இன்று இரவு திருச்சியை பதம் பார்க்கவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தீவிரம் காட்டி வந்த தென்மேற்கு பருவமழை, அப்படியே தமிழகத்தில் ஒரு விசிட்டை போட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் தென் பகுதிகளிலும், மேற்கு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிலும் மதுரையை விடாமல் வைத்து செய்து வருகிறது மழை. தொடர்ந்து 11 நாட்களாக பெய்த மழையில் மதுரையே திக்குமுக்காடி போயுள்ளது. … Read more

தமிழகத்தில் சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

திருநெல்வேலி: தமிழகத்தில் சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர், அவரது தங்கையை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் மத்தியில் நச்சுக் கருத்துகளை பரப்புவது புதிதல்ல. நீண்டகாலமாகவே இதுபோன்ற சாதிய, மதவாத … Read more

என் பொண்ணு கால் போயிடுச்சே சார்.. "கருணைக் கொலை பண்ணிடுங்க".. டிஜிபி அலுவலகத்தில் கதறிய போலீஸ் ஏட்டு

சென்னை: தவறான சிகிச்சையால் தனது மகளின் கால் பறிபோனதற்கு நீதி கேட்டு சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்றம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்திய தலைமைக் காவலர் கோதண்டராமன், இன்றைக்கு டிஜிபி அலுவலகம் முன்னர் தனது மகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தனது மகள் படும் அவஸ்தையை பார்க்க முடியவில்லை எனக் கூறிய அவர், தன்னையும், தனது மகளையும் கருணைக் கொலை செய்து விடுமாறும் கண்ணீர் மல்க கூறியது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. சென்னை ஓட்டேரி … Read more

மருத்துவம் போன்று இன்ஜினியரிங் படிப்பதற்கு நீட் தேர்வு இல்லை-NIT குழும தலைவர் சீதாராம்

இன்ஜினியரிங் படிப்பதற்கு நீட் தேர்வு திட்டம் தற்போது வரை இல்லை – தேசிய தொழில்நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம் கூறியுள்ளார்.   

ராமநாதபுரம் சாலை விபத்தில் பலியான இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: ராமநாதபுரம் சாலைவிபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம், மாயாகுளம் பகுதியில் திங்கள்கிழமை (14-8-2023) மதியம் அரசு பேருந்தும், தனியார் வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலைதடுமாறி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த … Read more

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன ரெண்டே பாயிண்ட்… பேச்சே கிடையாது, இனிமே வீச்சு தான்!

”ஏங்க?” என தனது டிரேட் மார்க் புன்னகையுடன் செய்தியாளர்களை பார்த்து இரண்டே பாயிண்ட்டில் சுருக்கென்று பதிலை தெரிவித்திருக்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். மதுரையில் 77வது சுதந்திர தின விழாவை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் இன்று (ஆகஸ்ட் 15) காலை கலந்து கொண்டார். இதை முடித்து விட்டு வெளியே வரும் போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பேருந்தில் தொண்டர்களுக்கு டிக்கெட் எடுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்! பிடிஆர் ஆடியோ சர்ச்சை சமீப … Read more

ராமநாதபுரத்தில் 12 கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா – பரபரப்பு புகார்கள்

எங்களால ஜனங்களுக்கு குடிக்க தண்ணி கொடுக்க முடியல, எங்களுக்கு எதுக்கு பதவி என கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நேரத்தில் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   

கிருஷ்ணகிரி | மலை உச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த வடமாநில தொழிலாளி: மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற வடமாநில தொழிலாளி தவறி 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உத்தரபிரதேச மாநிலம் சுந்தர்வால் பார்சேகிரி காலா பகுதியை சேர்ந்தவர் அமித்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் திங்கள்கிழமை மாலை காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலுக்கு சென்றார். பின்னர் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சிக்கு … Read more

இவர் என்ன விளையாட்டு பயிற்சியாளரா? மா.சுவை விமர்சித்த எடப்பாடி – உடனே பதிலடி தந்த அமைச்சர்!

தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக தமிழக அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் பல்வேறு சாதனைகளை அரங்கேற்றுகின்றனர். அதே சமயம் அவ்வப்போது நிகழும் சில மோசமான சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. கால்பந்து வீராங்கனையின் கால் போனது பின்னர் உயிர் போனது, சிறு குழந்தையின் கை பறிபோனது, பின்னர் உயிர் போனது, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற போன குழந்தைக்கு வெறிநாய்க் கடிக்கான வைத்தியம் பார்த்தது என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சமீபகாலமாக கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. … Read more

சென்னை: ’தவறான சிகிச்சையால் கால் பாதிப்பு’ மகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட காவலர்

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டதால் கால் பாதிக்கப்பட்டதாக கூறி மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட காவலர், இன்று மீண்டும் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.