தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினம் (ஜன.26), தொழிலாளர்கள் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2), உலக நீர் தினம் (மார்ச் 23), உள்ளாட்சிகள் தினம் (நவ.1) ஆகிய 6 நாட்களிலும் தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த … Read more

தமிழ்நாட்டில் ஐந்து ஊர்களில் மெட்ரோ: சேலம், திருச்சியில் நடைபெறும் முக்கிய பணி!

தமிழ்நாட்டில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரண்டு வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மூன்று வழித்தடங்களுக்கான பணிகள் மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் சேவையால் மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி திட்டமிட்டபடி தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள முடிகிறது. மதுரை, கோவை மெட்ரோமெட்ரோ ரயில் சேவையை தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நகரங்களுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசும், மெட்ரோ நிர்வாகமும் திட்டமிட்டு அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் மதுரை, … Read more

ஏடிஜிபி வெங்கட்ராமன் உட்பட 15 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபி க.வெங்கட்ராமன், சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உட்பட 15 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் பெ.அமுதா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்வர் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சிபிசிஐடி கூடுதல் டிஜிபி க.வெங்கட்ராமன், சென்னை சட்டம் … Read more

காவிரி நீர் எங்கே? கர்நாடகாவிற்கு இறுகும் பிடி… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 113 பக்கங்கள் கொண்ட விரிவான மனுவை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. இதில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம், மத்திய ஆணையங்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும் சில விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், வாதங்கள் குறித்தும் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் காவிரி நீரை பெற்று தர வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்காவிரி நீர் விவகாரம் … Read more

77-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஆளுநர், கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: நமது தேசிய கொடியானது எண்ணற்ற தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம், வியர்வை மற்றும் தியாகத்தின் விளைவாகும். அவர்களுக்கு நமது சுதந்திர தினத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்றி நமது நன்றியை செலுத்துவோம். … Read more

"ஆளுநர் திமிராக பேசி வருகிறார்".. தமிழ் மக்களின் மனநிலை தெரியவில்லை.. ஆவேசமாக பேசிய உதயநிதி

சென்னை: விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திமிர்த்தனமாக பேசி வருவதாகவும், தமிழ்நாட்டு மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகில் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக தனியார் நீட் கோச்சிங் மையத்திலும் அவர் இணைந்து படித்து வந்திருக்கிறார். இந்த சூழலில், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார். ஏற்கனவே ஒரு முறை … Read more

21 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் – புலனாய்வு, தீயணைப்பு அதிகாரிகள், ஊர்காவல் படையினருக்கும் கவுரவம்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 21 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அளவில் தனிச் சிறப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது. போலீஸாரின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த … Read more

வெறும் 160 மார்க், ரூ.25 லட்சத்துக்கு டாக்டர் சீட்… நீட் தேர்வை ஒன்னுமே பண்ண முடியாதா? உதயநிதியிடம் ஃபயாஸ்தின் ஆவேசம்!

”நீட் தேர்வை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாதா? இன்னும் எத்தனை மாணவர்களை தான் இழக்கப் போகிறோம்? எத்தனை அனிதாக்களை, எத்தனை ஜெகதீஷ்களை இழக்கணும்? 12ஆம் வகுப்பு படித்துவிட்டு நீட், ஜேஇஇ என இதே வேலையா போச்சு. அப்புறம் எதுக்காக 12ஆம் வகுப்பு படிக்கணும். என்கிட்ட பணம் இருக்கு, அதனால் எம்.பி.பி.எஸ் சேர்ந்துட்டேன். என் நண்பனிடம் பணமில்லை. உயிரை விட்டுட்டான். பணம் தான் முக்கியமானதாக இருக்கிறது. ஆளுநரை வெளுத்து வாங்கிய முத்தரசன்? நீட் தேர்வு என்பதே பொய் என … Read more