அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!

நெஞ்சு வலியால் பெங்களூர் நாராயண இருதாலையா மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

நீட் தொடர்பான ஆளுநரின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இதில், நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு அனுமதி தரமாட்டேன், மாணவர்களை அறிவுசார் மாற்றுத் திறனாளிகளாக இருக்க விடமாட்டேன் என்பன உள்ளிட்ட கருத்துகளை ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: “ஜனநாயக முறைகளை நிராகரித்து … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி இருக்கிறது? பெங்களூரு மருத்துவமனை அறிக்கை!

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சேலம் சென்றிருந்தார். அங்கு நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் செயல்படுவதற்கான அனுமதி ஆணையை வழங்கினார். இதையடுத்து சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி புறப்பட்டு சென்றார். காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. வாழ்க்கையில முக்கியமான கட்டத்தில் இருக்கீங்க அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு உடல்நலக்குறைவு உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதாவது தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள … Read more

சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்காக 6 கிராம ஊராட்சிகளுக்கு விருது – முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளை ஆறு கிராம ஊராட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக சட்டப்பேரவையில் 2021-22-ம் ஆண்டுக்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், “முன்மாதிரி கிராம விருது” தோற்றுவிக்கப்பட்டு, மாவட்டத்துக்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில், 37 கிராம ஊராட்சிகளுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கி கவுரவிக்கப்படும். இவ்விருதுக்கான கேடயமும், தலா ரூ.7.5 … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு – 120 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னை: அமலாக்கத் துறையினரின் விசாரணை முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவரை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்தார். அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் … Read more

ஊட்டிக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் – பழங்குடியின மக்களுடன் டான்ஸ் ஆடி உற்சாகம்!

முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அண்மையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சூரத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியதால் மீண்டும் எம்.பி பதவியை பெற்றார். அதன்பிறகு நாடாளுமன்றம் சென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல், பிரதமர் மோடி மீதும் மத்திய அரசின் மீதும் … Read more

நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: நாங்குநேரியில் அண்ணன், தங்கை அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா என்பவரது பள்ளி மாணவர்களான மகன் மற்றும் மகள் ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் … Read more