நாங்குநேரி கொடூரம் இனி தமிழ்நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது… ராமதாஸ் கண்டனம்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவரும் அவரது தங்கையும் சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது வீட்டில் வைத்து … Read more

’தமிழ்நாட்டுக்கு நீட் வேண்டாம், மசோதாவுல கையெழுத்து எப்ப போடுவீங்க’ ஆளுநரிடம் நேருக்கு நேர் வாக்குவாதம்

நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கொடுப்பீங்க என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பெற்றோர் ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.   

கோவை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

கோவை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியினருடன் இன்று (ஆக. 12) கலந்துரையாடுகிறார். இதற்காக கோவை வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து கார் மூலமாக உதகை, கூடலூர் மார்க்கமாக கேரள மாநிலம் வயநாடுக்குச் செல்ல உள்ளார். முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் … Read more

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்… ஆளுநர் ஆர்என் ரவி திட்டவட்டம்!

தமிழக ஆளுநரான ஆர் என் ரவி, எண்ணி துணிக என்ற பெயரில் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் இளநிலை நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை: ” நீட் தேர்வுக்கு எங்களால் அதிக பணம் செலவு செய்யமுடிவில்லை, நீட் தேர்வு இல்லாமலேயே தமிழக மாணவர்கள் மருத்துவத்துறையில் பல சாதனைகள் புரிந்துள்ளனர். எனவே … Read more

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டில் வெளியாகியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேர்காணலில் இருந்து: மக்களவையில் 1) கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பேசிய பிரதமர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சந்தர்ப்பவாத, அகங்காரக் கூட்டணி என்று விமர்சித்துள்ளார். நடப்பு கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் போதிய விவாதமின்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பிற பாஜக அமைச்சர்களும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பொறுப்பில்லாத … Read more

இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிகிறதா..? "எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது".. சீமான் ஓபன் டாக்

சென்னை: “இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரியவில்லை.. நீங்கள்தான் பிதுக்கி தள்ளுகிறீர்கள்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆவேசமாக கூறினார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை சிலர் பிரிக்க பார்க்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் பாரதத் தாயை வழிபட முடியாத சூழல் நிலவுகிறது எனவும் பேசியிருந்தார். பிரதமரின் இந்தப் பேச்சு ஒருவித சலசலப்பையும் பரபரப்பையும் … Read more

நாங்குநேரி சம்பவம் நெஞ்சைப் பதறச்செய்கிறது; பள்ளிக் கல்வித்துறை கண்காணிப்பு தேவை: டிடிவி தினகரன்

சென்னை: நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் … Read more

மக்களுக்கு குட் நியூஸ்: தக்காளி விலை அதிரடி குறைவு..! ஒரு கிலோ இவ்வளவு ரூபாய்தானா..?

Tomato Price In Tamilnadu Today: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.