ரூ.2,670 கோடியில் சென்னை டூ கடலூர் ரயில் பாதை… ஈசிஆர் ரூட் மாறுதா? லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை முதல் கடலூர் வரை கிழக்கு கடற்கரையை ஒட்டி ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது 16 ஆண்டுகால கனவு திட்டம். வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் ஜில்லென்ற காற்று, பச்சை பசேலென காணப்படும் ரம்மியமான சூழல். இத்தகைய சூழலில் ஒரு ரயில் பயணம். நினைத்து பார்க்கும் போது பலரும் குதூகலமாகி விடுவர். சென்னை டூ கடலூர் ரயில் பாதைஅதுவும் ஈசிஆர் வழியாக மாமல்லபுரம், புதுச்சேரி பயணம் என்றால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இதற்கான நிலம் … Read more

குடியரசுத் தலைவர் வருகை| புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்; பல சாலைகளில் வாகனங்களுக்குத் தடை

புதுச்சேரி: குடியரசுத் தலைவர் புதுச்சேரிக்கு வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்பி பிரிஜேந்திரகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார். அவர் வரும் வழியில் பாதுகாப்பு காரணம் கருதி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொதுமக்களுக்கு மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. நாளை (ஆக.7) காலை 8 … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… நியாய விலைக் கடைகளில் இன்று முதல் மீண்டும் அமல்!

தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வ தளத்தின் படி, மொத்தமுள்ள 39 மாவட்டங்களில் 34,793 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2.24 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். மொத்த பயனாளிகள் என்று பார்த்தால் 7 கோடியை தாண்டிவிடும். தற்போது டிஜிட்டல் முறையில் குடும்ப அட்டைகள் மாறியுள்ளன. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்இதை சரியாக பயன்படுத்தும் வகையில் ஆதார், கைபேசி பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே பொருட்கள் … Read more

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன் – டிடிவி தினகரன் சவால்

துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் ஆக மாட்டேன் என தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன், அவரை வீழ்த்தாமல் ஓயமாட்டேன் என அமமுக தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியுள்ளார்.  

மது வருவாயை நம்பி தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை விமர்சனம்

திருப்பரங்குன்றம்: மதுவினால் கிடைக்கும் வருவாயை நம்பி தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபயணம் மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் இருந்து நடைபயணத்தைத் தொடங்கிய அவர், மக்கள் மத்தியில் பேசியதாவது: “மதுவினால் கிடைக்கும் வருமானம், தொழு நோயாளி கையில் இருக்கும் வெண்ணைக்குச் சமம் என சொன்னவர் மறைந்த … Read more

"முதல்வருக்கு ஆங்கிலமும் தெரியாது.. இந்தியும் தெரியாது".. என்ன பண்றது? அண்ணாமலை கிண்டல்

மதுரை: இந்தி மொழி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு திமுக கடுமையாக எதிர்வினை ஆற்றி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது அவர், நமது முதல்வருக்கு ஆங்கிலமும் தெரியாது; இந்தியும் தெரியாது என்று விமர்சித்தது திமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. திமுக யாத்திரைக்கு பெயர் வைத்த அண்ணாமலை! அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அமித் ஷா, “உள்ளூர் … Read more

மனைவியை கொன்று காதலனை அடைய காதலி போட்ட பலே பிளான் – சினிமாவை விஞ்சும் சூழ்ச்சி

கேரளாவில் காதலனின் மனைவியை கொலை செய்துவிட்டு, அவரை மணந்து கொள்ள திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.    

10 ஆண்டாக சீரமைக்கப்படாத சென்னை – வில்லிவாக்கம் மார்க்கெட் சாலை

சென்னை: வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள மார்க்கெட் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை என உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து, இந்து தமிழ் திசை நாளிதழின் உங்கள் குரல் தொலைபேசி சேவையைத் தொடர்பு கொண்டு வி.ஆரா. ரகு ராமன் என்ற வாசகர் கூறியதாவது: வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள மார்க்கெட் சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க நாள்தோறும் … Read more