அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!!

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை (21.03.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மார்ச் 22 மற்றும் 23ம் தேதிகளில் கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு … Read more

தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, தமிழ் வளர்ச்சிக்கும், பண்பாட்டுக்குமான திட்டங்களை அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு: 1. தாய் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் 2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும் … Read more

தமிழக பட்ஜெட் 2023: விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டி சொன்ன 2 விஷயங்கள்!

தமிழக பட்ஜெட் 2023 நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சீர் மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி ரவிக்குமார் பேட்டி இதுதொடர்பாக விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமாரிடம் ’சமயம் தமிழ்’ சார்பாக பேசினோம். அதற்கு அவர், ஆதி திராவிடர் மற்றும் … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திமுக வைத்திருக்கும் மறைமுக செக் – வலுக்கும் எதிர்ப்பு!

TN Budget 2023: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான ரூ. 1000 என்ற மாத உரிமைத்தொகை திட்டத்தை இந்தாண்டு அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியான நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல அறிவிப்புகளையும் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000, தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு … Read more

கொடியக்காடு – கோடியக்கரை எல்லையில் பாலம் கட்டுமானப் பணி: இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கே மாற்று பாதை

நாகை : நாகை அருகே பலம் கட்டுமானப்பணி காரணமாக பொதுமக்கள் இரண்டு கி.மீ தொலைவு சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேதாரண்யம் அருகே கொடிய காட்டில் சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தை இடித்துவிட்டு புதிய பலம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள மாற்று பாதை இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் அளவிற்கு உள்ளது. கொடியக்காடு – கோடியக்கரை ஊராட்சிகளுக்கு இடையே ஒரே ஒரு பிரதான சாலை மட்டுமே உள்ளதால் … Read more

"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்திக் சிதம்பரம் நல்ல சாய்ஸ்" – கே.எஸ்.அழகிரி

ஜி.கே.வாசன் மோடிக்கும், பாஜகவுக்கும் ஆதரவாக உள்ளதால் தமாகாவினர் அதை விரும்பவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்திக் சிதம்பரம் வந்தால் சிறப்பாக செயல்படுவார் என கே.எஸ்.அழகிரி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். மதுரையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்து பேசுகையில்… தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தோழர்கள் சிறிது சிறிதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். தமாகாவை எந்த நோக்கத்திற்காக, … Read more

தமிழகமே எதிர்பார்த்த அந்த அறிவிப்பு… ‘மகளிர் உரிமைத் தொகை ரூ1000 செப். 15 முதல் வழங்கப்படும்’

தமிழகமே எதிர்பார்த்த அந்த அறிவிப்பு… ‘மகளிர் உரிமைத் தொகை ரூ1000 செப். 15 முதல் வழங்கப்படும்’ Source link

மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய், 50 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே! யார் யாருக்கு கிடைக்கலாம்?! 

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பானது மிகப் பிரதானமாக பேசப்பட்டது. மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது. திமுக அரசு ஆட்சியையும் அமைத்தது. ஆனால் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட குடும்பத் தலைவருக்கான உரிமை தொகை திட்டம் மட்டும் கிடப்பிலேயே போடப்பட்டது. எப்பொழுது தொடங்கப்படும் என கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது.  தொடர்ந்து இது தொடர்பான சர்ச்சைகள் எழுந்து வந்த … Read more

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருபத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும். மேலும், சென்னையைப் பொருத்தவரை ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை … Read more

தமிழ்நாடு பட்ஜெட் 2023 | பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்டுதல் முதல் கல்வி உதவித்தொகைக்காக தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்குதல் வரை தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு … Read more