கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 6 பேரை இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு

கோவை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 6 பேரை இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோவை மத்திய சிறையில் இருந்து 6 பேரையும் என்.ஐ.ஏ. நீதிபதி முன்பு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

விளம்பரத்திற்காக வீட்டின் முன் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

கும்பகோணத்தில் இந்து முன்னணி பிரமுகர் தன்னுடைய வீட்டில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், தன் வீட்டின் முன் தானே மண்ணெண்ணெய் பாட்டில் வீசியது அம்பலமானதால் போலீசார் கைதுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சக்கரபாணி (38). கொத்தனார் வேலைசெய்து வரும் இவர், இந்து முன்னணியின் மாநகர செயலாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சக்கரபாணி வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் வாசனையுடன், கண்ணாடி … Read more

அனைத்து சாதியினருக்கும் சமமான இட ஒதுக்கீடு! ஆலோசனையில் இறங்கிய ஸ்டாலின்!

தமிழகத்தில் முன்னேறிய வகுப்பினர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், அருந்ததியர், முஸ்லிம்கள் என 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ஏழைகளுக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் “10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு பின்னடைவு” என … Read more

71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி!!

மத்திய அரசின் ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுகிறது. அதில், சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை … Read more

சிவன் கோவில்களில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு வெகு விமரிசையாக நடைபெற்ற சங்காபிஷேகம்..!

தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு  சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்குகளால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.   புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் கார்த்திகை சோமவார விழாவை முன்னிட்டு சங்கு அபிஷேகம் நடந்தது .   விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் மகா சங்காபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுச்சேரி யூனியன் … Read more

மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோவையில் நவ.25-ல் கதவடைப்பு, உண்ணாவிரதம்: தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவிப்பு

கோவை: இரண்டு வகையான மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி, கோவையில் உள்ள 18 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய ‘போசியா’ கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 25-ம் தேதி கோவையில் கதவடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. ‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முககுமார் உள்ளிட்டோர் கோவையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ல் தொடங்கி இன்று வரை மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் தொழில் நிறுவனத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் … Read more

கே.எஸ்.அழகிரி பதவிக்கு சிக்கல்: டெல்லி எடுக்கும் முக்கிய முடிவு!

ஒரு கட்சி என்றால் பல கோஷ்டிகள் இருக்கத் தான் செய்யும். ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்கு மிக்கவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் ஆதரவாளர்கள் இருப்பார்கள். யாருக்கு ஆதரவு அதிகம், யாருக்கு முக்கிய பதவி என்ற கேள்வி எழும் போது கோஷ்டி மோதல்கள் உருவாகும். இந்த கட்சிதான் என்றில்லாமல் அனைத்துக் கட்சிகளிலும் காணக் கிடைக்கும் காட்சி தான். ஆனால் கோஷ்டி மோதல் என்றால் காங்கிரஸ் தான் என்ற நிலை உருவாகிவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல, டெல்லி தலைமையிலும் சரி, பிற மாநிலங்களிலும் இதுதான் … Read more

திருவள்ளூரில் தீபாவளி சீட்டில் ரூ.27 கோடி மோசடி: முக்கிய குற்றவாளிகள் கைது

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் தீபாவளி சீட்டு நடத்து ரூ.27 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மாலந்தூர் பகுதியை சேர்ந்த ஜே.பி.ஜோதி, மனைவி சரண்யாவை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைந்தனர்.