#தமிழகம் | பற்றி எறியும் பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரம் – அதிர்ச்சி காணொளி!

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீ விபத்து/கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயில் கோபுரம் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிகிறது #sivakasi #fire pic.twitter.com/HJcGokdfrv — எம். சின்னத்தம்பி (@cinnattampi) November 20, 2022 சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் நிலையில், இன்று இரவு சுமார் 8 மணி அளவில் கோவில் கோபுரம் சாரம் மேல் மூடிருந்த துணியில் தீப்பற்றி … Read more

காதலியின் சடலத்துக்கு தாலி கட்டிய காதலன்!!

அசாம் மாநிலம் கவுகாதியில் பிதுபன் தமுளி (27) என்ற இளைஞரும், பிராத்தனா போரா என்ற இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இதனிடையே இளம்பெண் பிராத்தனாவுக்கு சில நாட்களாக உடல்நல கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் கௌகாதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை … Read more

மங்களூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மேற்கோள்காட்டிய அண்ணாமலை.. கர்நாடக டி.ஜி.பி. பொதுமக்களுக்கு முறையாக தெரிவித்துள்ளதாக டிவீட்..!

மங்களூருவில் ஆட்டோவில் நேரிட்ட குண்டுவெடிப்பை கர்நாடக டி.ஜி.பி. முறையாக தெரிவித்துள்ளதாகவும், கோவை சம்பவத்தை தமிழக அரசு இதுபோன்று முறையாக கையாளவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். மங்களூருவில் நடந்த சம்பவம், எதிர்பாராவிதமாக நடந்த விபத்து அல்ல, தீவிரவாத செயல் என கர்நாடக டி.ஜி.பி. தெரிவித்திருந்தார். இதனை, தனது டிவிட்டர் பதிவில் மேற்கோள்காட்டிய அண்ணாமலை, குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு மக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு மங்களூரு சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு … Read more

மழைநீர் வடிகால் பணிகள் 80  முதல் 95 சதவீதம் வரை முடித்துள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “மழைநீர் வடிகால் பணிகளை முழுவதுமாக முடிக்கவில்லை. 80 முதல் 95 சதவீதம் வரைதான் முடித்துள்ளோம். அதையே மக்கள் பாராட்டுகின்றனர். இன்னும் மிச்சம் சில பணிகள் உள்ளன. அதையும் வரக்கூடிய காலக்கட்டத்தில் செய்து முடிப்போம் என்று உறுதியளிக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் 56 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை … Read more

தமிழகத்தின் முதல் தனியார் செக்போஸ்ட்; கையை பிசையும் போலீஸ்!

திருப்பூர் மாவட்டம் ஊதியூர், காங்கேயம் சுற்று பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே விவசாய பட்டிகளில் அடைக்கப்பட்டு இருந்த செம்மறியாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பட்டியில் இருந்து 5, 10, 15 என ஃபல்க்காக ஆடு திருட்டு போகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த விவசாயிகள், பட்டியில் நாய்களை காவலுக்கு வைத்த போதும் நாய்களுக்கு மயக்க மருந்து அல்லது சில்லி சிக்கன் வாங்கி போட்டோ அடித்து கொன்று விட்டு நான்கு … Read more

மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடிகளை அகற்றவேண்டும்: செங்குன்றம் பகுதிமக்கள் கோரிக்கை

புழல்: மின்சார கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சென்னை புழல் பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், சக்திவேல் நகர், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் மற்றும் திருமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டதால் தற்போது மின்கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது. இதனால் மின்கம்பம் சேதம் அடைந்து வருவதுடன் ஷாக் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. மழை மற்றும் காற்றின்போது … Read more

நாடு முழுவதும் 20 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம்: உ.பி இளைஞருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு

மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வுக்காக இந்தியா முழுவதும் 20 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவைச் சேர்ந்தவர் சத்யஜித் பதக் (35). இவர், இந்தியா முழுவதும் உலக அமைதி மற்றும் மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அலகாபாத்தில் இருந்து புறப்பட்ட இவர், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, பாண்டிச்சேரி வழியாக தமிழ்நாடு வந்தடைந்தார், இதையடுத்து … Read more

டெல்டாவுக்கென அமைச்சர் யாரும் இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் இழப்பு – அய்யாக்கண்ணு

டெல்டாவுக்கென அமைச்சர் யாரும் இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் இழப்பு – அய்யாக்கண்ணு Source link

24 மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் கதவுகள்!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவுகள் 24 மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக மூடப்படுவது வழக்கம். அந்த காலத்தில் ஜார்ஜ் டவுண், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில் சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டது. அதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. ஆனால் நாளடைவில் மக்கள் சுற்றிச் செல்வதற்கு பதிலாக, உயர்நீதிமன்ற வளாகத்தின் உள்ளே இருக்கும் பாதையை பயன்படுத்தத் தொடங்கினர். … Read more

விழுப்புரம் | உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக அறிக்கை: ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்த முதியவர் அதிர்ச்சி

விழுப்புரம்: மரக்காணம் அருகே ஓய்வூதிய தொகை கேட்டு விண்ணப்பித்த முதியவர் உயிரோடு இருக்கும் போதே இறந்துவிட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கேசவநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(63) முதியவரான இவர் தன் மகளை திருமணம் செய்து வைத்து விட்ட நிலையில் மனைவி கெங்கம்மாளுடன் வசித்து வருகிறார். இரண்டு கறவை மாடுகளை வைத்து பால்கறந்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வரும் இவர் கடந்த 2011ம் ஆண்டு முதலமைச்சரின் உழவர் … Read more