வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார் ஸ்டாலின்: இங்கிலாந்தில் நாளை முதல் பயணம்

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் ஜெர்மனிக்கு அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து, … Read more

மூப்பனாரை பிரதமர் ஆக விடாமல் தடுத்தது துரோகம்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சென்னை: ஆளுமைமிக்க தலைவரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று மலர்வளையம் வைத்தும், மலர்கள் … Read more

விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்!

தமிழக அரசு நெற்பயிருக்கான கொள்முதல் விலையை உயர்த்தி, அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“திமுக ஆட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டுங்கள்” – அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு பழனிசாமி அறிவுரை

சென்னை: திமுக ஆட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுங்கள் என்று அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார். அதிமுக மாணவரணி சார்பில் ‘உரிமைக்குரல்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சாளர்கள் 217 பேருக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் … Read more

அரசு ஊழியர்களுக்கு பெரிய நிம்மதி… ஓய்வு பெறும் காலத்தில் இனி டென்ஷன் வேண்டாம்!

Tamil Nadu Government Employees News: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்ய கூடாது – அரசாணை சொல்வது என்ன?

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: ‘ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 7-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக … Read more

ஸ்டாலின் மருத்துவ முகாம்: 1 வாரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்-அமைச்சர் மா.சு பேட்டி!

Nalam Kaakum Stalin Medical Camp : கடந்த வாரம் வரை நடைபெற்ற 112 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில்  1,48,290 பேர்கள் மருத்துவ பயன்பெற்றுள்ளதாக அமைசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

பிஹார் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறு: தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை: பிஹாரில் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரையில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஹார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரை கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இச்சம்பவத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் … Read more

புதுமைப் பெண் திட்டம் : கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 – அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்

puthumai pen thittam : கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் புதுமைப் பெண் திட்டம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

அமெரிக்க வரி நெருக்கடி மீதான மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து இந்தியா தனது ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. உற்பத்தி மற்றும் மென்பொருள் … Read more