மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு | நாளை முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் – முழு விவரம்

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை முதல் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன்படி, மின் நுகர்வோர் … Read more

மேட்டூர் அருகே பரபரப்பு; இந்தி திணிப்பை எதிர்த்து திமுக தொண்டர் தீக்குளித்து சாவு

மேட்டூர்: மேட்டூர் அருகே இந்தி திணிப்பை எதிர்த்து, திமுக தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினார். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சி 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்(85) விவசாயி. இவர் நங்கவள்ளி ஒன்றிய திமுக முன்னாள் விவசாய அணி அமைப்பாளர். இவரது மனைவி ஜானகி (80). இவருக்கு மணி (58), ரத்னவேல் (55) என்ற மகன்களும், கல்யாணி (57) … Read more

11 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. பாலிடெக்னீக் மாணவன் மீது பாய்ந்த போக்ஸோ.! 

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகே வெம்பாக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பைரவபுரம் கிராமத்தில் வசித்து வரும் பிரசன்னா(19) என்பவர் பாலிடெக்னிக் கல்லூரில் 3ம் வருடம் படித்து வந்துள்ளார்.  இவர்கள் இருவரும் பேருந்தில் பள்ளி, கல்லூரிக்கு ஒன்றாக பயணித்து வந்துள்ளனர். அப்பொழுது சிறுமிக்கும், பிரசன்னாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கின்றது. மாணவியை பிரசன்னா அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார்.  … Read more

சாலையில் செல்லும்போது செய்த சிறு தவறினால் பரிதாபமாக போன ஒரு உயிர்..!!

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வருபவர் குமார். இவர் தனது நண்பர் சந்துருவுடன் இருசக்கர வாகனத்தில் திருமயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரசம்பட்டி அருகே சென்றபோது வாகனத்தை ஓட்டிச் சென்ற குமாரின் மூக்கு கண்ணாடி தவறி கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து மூக்குக் கண்ணாடியை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை உடனே குமார் திருப்பியுள்ளார். அப்போது திருவோணத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சந்துரு சம்பவ … Read more

ஆதார் இணைப்பு அறிவிப்பால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு

சென்னை: நுகர்வோரின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மின்நுகர்வோர் பலரும் மின்வாரிய இணையதளத்துக்கு சென்று, தங்கள் மின்இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. இதன் காரணமாக ஆதார் எண்ணை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், மின்கட்டணத்தையும் கட்ட முடியாததால், பலரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதுதொடர்பாக நுகர்வோர் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, நவ.24 முதல் 30-ம் தேதிக்குள் மின்கட்டணம் … Read more

திருவண்ணாமலையில் ரூ.30 லட்சத்தில் புதுப்பிப்பு சுப்பிரமணியர் தேர்; வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக வரும் 6ம் தேதி மகா தீப பெருவிழாவும் நடைபெற உள்ளது.  7ம் நாள் விழாவில் அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் பஞ்ச ரதங்கள் வலம் … Read more

தமிழக காங். தலைவர் பதவியை ஏற்க தயார்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல்

மதுரை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தனக்கு திறமை, விருப்பம் உள்ளதாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். மதுரையில் முன்னாள் பிரதமர்இந்திரா காந்தியின் பிறந்தநாள்விழா நடந்தது. அதில் பங்கேற்றுநலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியதாவது: சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15-ல்நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இதை நடுநிலையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுத்தது தவறு எனச் சுட்டிக்காட்டினேன். … Read more

வேலூரில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேருவதற்கு 3 மாநில பெண்கள் ஆர்வம்; நாளை மறுதினம் வரை முகாம் நடக்கிறது

வேலூர்: வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 3 மாநிலங்களை சேர்ந்த பெண்கள் ஆர்முடன் பங்கேற்றனர். பெண் விண்ணப்பதாரர்களுக்கான இந்த முகாம் நாளை மறுதினம் வரை நடக்கிறது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடந்த 15ம் தேதி முதல் வரும் 29ம் தேதி(நாளை மறுதினம்) வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் வரை ஆண்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடந்தது. … Read more

தி.மலை | அண்ணாமலையார் கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்ற வைபவம்: இன்றிரவு விநாயகர் உற்சவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. பின்னர், பிடாரி அம்மன் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயில் தங்கக்கொடி மரம் அருகே உள்ள பிடாரி அம்மன்சந்நிதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பிடாரி அம்மன், மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் திரண்டு, கற்பூர தீபாராதனை … Read more

தமிழ்நாடு, கேரளாவில் ஆளுநர்களை வைத்து பாஜ போட்டி, அரசாங்கம் நடத்த நினைப்பது ஜனநாயக விரோதம்: முத்தரசன் குற்றச்சாட்டு

கும்பகோணம்: ஆளுநர்களை வைத்து பாஜ போட்டி  அரசாங்கம் நடத்த நினைப்பது ஜனநாயக விரோதம் என்று இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார். தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் அவர்  நேற்று அளித்த பேட்டி: அரசியல்  சட்டம், அரசியல் சட்டத்தை உருவாக்கும் அமைப்புகளை சீர்குலைக்கும் அல்லது  எதிர்த்து செயல்படுகின்ற போக்கை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது என்பது,  உச்சநீதிமன்றம், தேர்தல் அதிகாரி குறித்து  கேள்வி எழுப்பி இருப்பதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை,  ஒவ்வொரு இந்திய … Read more