விதிகளை மீறி அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் மீது எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கோலப்பன்சேரியில் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு கீழ் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more

சென்னையில் இன்று மழை கொட்டும், தமிழகத்தின் நிலை என்ன.. வானிலை மையம் அலர்ட்

Heavy Rain Alert: சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அரசுப் பேருந்து கண்ணாடிகள், ஜன்னல்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரி வழக்கு

சென்னை: அரசு பேருந்துகளில் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், கண்ணாடிகளிலும், ஜன்னல் கண்ணாடிகளிலும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது, வெளியில் இருந்து பேருந்துகளுக்குள் பார்க்க முடியாதபடி உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இது, பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : புதிதாக 17 லட்சம் பேர் விண்ணப்பம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக இதுவரை 17  லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தனர்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: “ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்மலா சீதாராமன், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: எளிமையும், நேர்மையும், … Read more

யாருக்கெல்லாம் கல்வி உதவித்தொகை ரூ. 2 லட்சம் கிடைக்கும்? அரசின் முக்கிய அப்டேட்

Central universities scholarship 2025 : மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் 2 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது: நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம்

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஆதர​வாகப் போராடிய வழக்​கறிஞர்​கள் மீதான வழக்​கு​களை கைவிட முடி​யாது என உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் திட்​ட​வட்​ட​மாக தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, போலீ​ஸார் மீதும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ள​தால் இந்த சம்​பவம் தொடர்​பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலை​மை​யி்ல் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்​கலாம் என நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர். சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்​மைப் பணி​யாளர்​கள் நடத்​திய தொடர் போராட்​டத்​தின்​போது அவர்​களுக்கு ஆதர​வாக போராடிய வழக்​கறிஞர்​கள் மற்​றும் சட்​டக்​கல்​லூரி மாணவர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தனர். … Read more

நீங்களும் ஸ்கூட்டர் வாங்க மானியம் பெறலாம்! இந்த ஆவணம் இருந்தால் போதும்!

புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20,000 மானியமாக வழங்கப்படும். எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழாவை முன்னிட்டு அடையாறு பகுதியில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்​கண்ணி ஆலய பொன்​விழா ஆண்​டுப் பெரு​விழா கொடி ஏற்​றத்​துடன் நேற்று (ஆக.29) தொடங்​கியது. செப்​. 8-ம் தேதி வரை இத்​திரு​விழா நடை​பெற உள்​ளது. இதில், ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்க உள்​ளனர். பல்​வேறு பகு​தி​களில் இருந்தும் மக்கள் நடைபயண​மாக வந்த வண்​ணம் உள்​ளனர். இதையடுத்​து, போக்​கு​வரத்து நெரிசலைத் தவிர்க்​கும் வகை​யில் அடை​யாறு மற்​றும் பெசன்ட் நகர் பகு​தி​களில் போக்​கு​வரத்​தில் சில மாற்​றங்​களை போலீ​ஸார் மேற்​கொண்​டுள்​ளனர். கூட்ட நெரிசலைப் பொருத்து நாளை (ஆக.31) மற்​றும் … Read more

ரூ.48,000 சம்பளத்தில் வங்கியில் வேலை! டிகிரி இருந்தால் போதும்! எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய அரசின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி, நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.