7வது திருமணம் செய்ய வந்த பெண்! 6வது கணவனால் மடக்கி பிடிப்பு!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும், மதுரை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ம்  தேதி திருமணம் நடந்தது.  திருமணத்தை மதுரையை சேர்ந்த பாலமுருகன் (45) என்ற புரோக்கர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அக்கா மற்றும் மாமா ஆகிய இருவர் மட்டுமே வந்துள்ளனர்,  அவர்களும் புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிக்கொண்டு சென்றனர்.  தனபால், சந்தியாவுடன் புது … Read more

விழுப்புரம்: பள்ளி மாணவி தற்கொலை – மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்

மரக்காணம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், இவரது 14 வயது மகள், கந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு மாணவி அவரது வீட்டில்; தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு … Read more

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான விதிகள் வெளியீடு!!

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் எந்தவொரு தனிநபர், எந்த சாதி, மதம் போன்றவற்றைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது. எக்காரணம் கொண்டும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு தொடர்பாக எதையும் பேசவோ அல்லது கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் … Read more

உலக காண்டாமிருக நாள் கொண்டாட்டம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஐஓசி சார்பில் நடைபெற்றது

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில்தத்தெடுக்கப்பட்ட காண்டாமிருகங்களுடன் உலக காண்டாமிருக நாளை இந்தியன் ஆயில் நிறுவனம் கொண்டாடியது. சுற்றுச்சூழல் சமன்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, மக்களுக்குத் தரமான வாழ்க்கைச் சூழலைத்தர வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன், இந்தியன் ஆயில்நிறுவனம் பல்வேறு முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உலக காண்டாமிருக தினத்தையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் (சந்தைப்படுத்துதல்) வி.சதீஷ் குமார் கலந்துகொண்டு, பார்வையாளர்களுக்குக் காண்டாமிருக பாதுகாப்பு தொடர்பான கையேடுகளை வழங்கினார். காண்டாமிருகங்கள் … Read more

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு கட்டுப்பாடு: இதை பின்பற்றவில்லை என்றால் சிக்கல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தமிழக முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார் அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளன. *அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் எந்தவொரு தனிநபர், எந்த சாதி, மதம் போன்றவற்றைப் பற்றி தவறாகப் … Read more

'கரண்ட் கொடுக்கவும் வக்கில்லை, மின்சார கட்டணத்தை உயர்த்த வெக்கமில்லை' – செல்லூர் ராஜூ

ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒளிப்பதாக கூறிய திமுக ஆட்சியில் தமிழகம் தற்போது போதை மாநிலமாக மாறி விட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் செய்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை தெற்கு மாசி வீதி T.M. கோர்ட் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,” ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு … Read more

பிளாக்மெயில் செய்த சிறுவனை கொன்று விட்டு தானும் தற்கொலை..!!காரணம் ஓரினச்சேர்க்கையா …??

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் நேற்று வாய் மற்றும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 20-ம் தேதி ஹசிரா பகுதியில் 20 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடமிருந்து 4 பக்கங்கள் கொண்ட தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டது. அந்த தற்கொலைக் கடிதத்தில், சிறுவன் தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், தன்னை பிளாக்மெயில் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவன் தன்னை … Read more

தலைமைச் செயலக சங்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சென்னை: தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்றுமாலையுடன் முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இதில், ஓட்டுநர்கள், சட்டப்பேரவைநிருபர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் மாநிலஅளவில் முக்கியமான சங்கம் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கமாகும்.இந்த சங்கத்தின் தற்போதைய தலைவராக பீட்டர் அந்தோணிசாமி உள்ளார். இந்நிலையில், இச்சங்கத்தின் தலைவர், செயலாளர், இணை செயலாளர்கள், பொருளாளர் ஆகிய … Read more

அதிகாரிகளுக்கு பாடம் நடத்திய இறையன்பு: வேளாண் துறையில் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

தமிழக விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மை – உழவர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, துறை அலுவலர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் எழுச்சி உரையாற்றினார். தமிழகத்தில் அதிகரித்துவரும் தரிசுநிலங்களை விளைநிலங்களாக மாற்றி, சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கவும், பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் நவீனத் தொழில்நுட்பங்களை பின்பற்றி, மகசூலை அதிகரித்து, அதன் மூலம், தமிழக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி, … Read more

கொடநாடு கொலை, கொள்ளைக்கு முன்பும், பின்பும் 100க்கும் மேற்பட்டோரிடம் பேசிய ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ்: அரசு வழக்கறிஞர் தகவல்

ஊட்டி:  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். சம்பவம் நடந்த சில நாட்களில் சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் கனகராஜ் உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இவ்வழக்கில் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் … Read more