தோழியின் நிச்சயதார்த்த விழாவில் 38 சவரன் நகை திருடிய பெண்!!

தோழியின் நிச்சயதார்த்த விழவில் 38 பவுன் நகையைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவரின் மகளுக்குக் கடந்த 18ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவினர்கள் மற்றும் தோழிகள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 38 பவுன் நகைகள் மாயமானதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் முகமது ஆரிப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் … Read more

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ போர்க்கொடி

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சட்டப்பேரவை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவும் உள்ளதாக குறிப்பிட்டனர். இதையடுத்து பாஜக தரப்பினர் ஆளுநர் தமிழிசையிடம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வரிடம் பேசி தீர்வு காணுமாறு அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வென்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடந்து … Read more

நாளை முதல் அக். 9-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன்

திருச்சி: நாளை முதல் அக். 9-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை என காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பொது அமைதியை காக்கும் வகையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் விசாரணைக்கைதி இறப்பு – 10 நாட்களுக்குப்பின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் தங்கபாண்டியனின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். எம்.டி.ஆர். நகரில் கடந்த 13-ம் தேதி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக செம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது உடல்நல குறைவு ஏற்பட்டதால், தங்கபாண்டியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் கடந்த 14-ம் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார் தாக்கியதால்தான் தங்கபாண்டியன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்து … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிப்ஸ் வாங்கிக் கொடுத்த உறவினர்!!

சிறுமியை உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, யாரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக 100 ரூபாயும், சிப்ஸ் பாக்கெட்டும் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் துப்ரி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியின் வீட்டிற்கு, உறவினர்கள் அவ்வப்போது வருவது வழக்கம். சம்பவத்தன்று சிறுமியின் தாயாருக்கு சகோதரர் முறையான உறவினர் ஒருவர் (31), சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார், தாயும் அதற்கு சம்மதித்துள்ளார். சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற சிறுமியின் மாமா, பொருட்கள், சாக்லேட் … Read more

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

மதுரை: மாணவர்களை கழிவறை சுத்தம் செய்த வைத்த புகாரின் பேரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் ரேணுகாதேவி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”நத்தம் தாலுகா கணவாய்பட்டி வேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியிலுள்ள கழிவறைகளை பள்ளி மாணவர்களை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தி வருகிறார். இதை பெற்றோர்களிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் மாணவர்களை அவர் மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட … Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… மேல்முறையீடு செய்க – சீமான் ஐடியா

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் அக்டோபர் இரண்டாம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தமிழ்நாட்டில் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. அணிவகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்கு தமிழ்நாட்டில் பலரது மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆளுங்கட்சியான திமுகவையும் பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை … Read more

35 டன் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறும் பிஏபி அணையில் நிபுணர்குழு 2வது நாளாக ஆய்வு

ஆனைமலை: கோவை, திருப்பூர், ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம். இந்த திட்டத்தில் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட தொகுப்பு அணைகள் உள்ளன. இதில், குறிப்பாக பரம்பிக்குளம் அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பராமரிப்பு முழுவதும் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணை சுமார் 17 டி.எம்.சி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. கடந்த சில … Read more

நாகை: அனாதையாக இறந்த 2500 உடல்களை அடக்கம் செய்து திதி கொடுக்கும் சமூக சேவகர்.!

ஆதரவற்ற நிலையில் இறந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர். மஹாளய பட்ச அமாவாசையை முன்னிட்டு நாகையில் பித்ருகளுக்கு உறவாக நின்று ஆன்மா சாந்தி அடைய வேண்டி வங்க கடலில் தர்ப்பணம் செய்த நிகழ்வு, பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூவுலகில் பிறக்கும் மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆதரவற்றவர்களாகி இறந்து போகும்போது அவர்களுக்கு உறவாக மாறி உறவுகள் நிறைவேற்ற வேண்டிய இறுதிச் சடங்கை தனிமனிதராக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருபவர் … Read more

கோவையில் தொடரும் பரபரப்பு: இந்து முன்னணி நிர்வாகி காருக்கு தீவைப்பு

Coimbatore News in Tamil: கோவை குனியமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தியாகு. இவர் இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடினர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயனை அணைத்தனர். இது குறித்து தகவலறிந்த குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் அடுத்தடுத்து 4 இடங்களில் … Read more