டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவமழையினால் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகியுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்த ஆண்டு இதுவரை சுமார் 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; சுமார் 9 பேர் மரணமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. குறிப்பாக … Read more

நகராட்சி நிர்வாகப் பணி நியமன முறைகேட்டில் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும்: இபிஎஸ்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழக பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் eடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்’ என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த … Read more

சிபிஆர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை: போலீஸ் விளக்கத்தில் உடன்பாடு இல்லை – வானதி சீனிவாசன்

கோவை: கோவை டவுன் ஹால் பகுதியில் குடியரசு துணைத் தலைவர் பாதுகாப்பு வளையத்திற்குள் இளைஞர்கள் நுழைந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கொடுத்த விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை சாய் பாபா காலனி பகுதியில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று நடந்த அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய … Read more

குடியரசு துணைத் தலைவர் இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இன்று மாலையில் மதுரை வருகை தந்தார். அதனையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று மாலை 6.30 மணியளவில் கோயிலில் அம்மன் சன்னதி வாசலுக்கு காரில் வருகை தந்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் … Read more

பிஎம் கிசான் 21வது தவணைத் தொகை : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு இறுதி எச்சரிக்கை

PM Kisan 21st installment : தமிழ்நாடு விவசாயிகள் பிஎம் கிசான் 21வது தவணைத் தொகை பெற விவசாயிகளுக்கு அரசு இறுதி  எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தில் பல லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாய்ப்பு: மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

விருதுநகர்: வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார். விருதுநகரில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கில் மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று ஆய்வு மேற்காண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், விருதுநகரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு 1961-ல் தொடங்கப்பட்டது. சுமார் 5.5 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 21,254 மெட்ரிக் டன் அரிசி சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இங்கு ரேசன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் அரசி … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம் : பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்

Tamil Nadu voter list 2025 : வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

விளையாட்டை வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும்: அன்பில் மகேஸ் அறிவுரை

தஞ்சாவூர்: விளையாட்டை வெறும் விளையாட்டுதான் என கருதாமல், அதையும் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகள போட்டியின் தொடக்க விழா இன்று (அக்.29) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். எம்.பி. க்கள் கல்யாண சுந்தரம், முரசொலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

TVK 2.0: விஜய் எடுத்த அதிரடி முடிவு? முக்கியமான நிர்வாகி மிஸ்ஸிங்! என்ன காரணம்?

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஒருவித தயக்கம் காட்டி வந்த தவெக, கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்தது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

நவ.5-ல் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்: விஜய் அறிவிப்பு

சென்னை: நவம்பர் 5 ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’ அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. … Read more