தூத்துக்குடி: மரைன் ஷிப்பிங்கில் பணிபுரிந்த நபர் மர்ம முறையில் மரணம்

தூத்துக்குடியில் தனியார் மரைன் ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த சந்தனராஜ் என்பவர் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கடந்த 25 ஆம் தேதி இரவு பணியில் இருக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை, ரூ.24 லட்சம் அபராதம்!

வேலூர்: ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பாக்கியுள்ள 24 காவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பத்தூர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை அறிவித்தது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி மனைவி பவித்ரா என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் … Read more

அமெரிக்க வர்த்தகப் போர்: தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.. காரணங்களை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Why Tamil Nadu Affected By US Trade War: அமெரிக்க வர்த்தகப் போர்: தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

“2006 தேர்தலில் விஜயகாந்த் போல 2026-ல் விஜய் தாக்கம் ஏற்படுத்துவார்” – தினகரன் கணிப்பு

தஞ்சாவூர்: “2006 தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கணித்துள்ளார். தஞ்சாவூரில் திருமண விழாவில் இன்று பங்கேற்ற டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “பல்வேறு மொழிகள் பேசும் – வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் இந்தியாவில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து யார் அவதூறு பேசினாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 2006 சட்டப்பேரவைத் … Read more

விவசாயிகள் இலவச மின்சார திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்! தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Free Electricity Scheme : தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் இலவச மின்சார திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

“மதுரை மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜூ

மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுக்கு பொறுப்பேற்று மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், மாநகர அதிமுக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியவது: “மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத மேயரின் கணவர் சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவர் செய்த முறைகேடுகளுக்கு மாநகராட்சி மேயர்தானே காரணம். அவர் பொறுப்பேற்று … Read more

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைப்பர்களுக்கான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு விரைந்து நலம் பெற விழைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “நல்லகண்ணு அய்யா விரைந்து நலம் பெற விழைகிறேன்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா விரைந்து நலம் பெற விழைகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று … Read more

இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அதுவும் 2 நாட்களுக்கு…!

Kanniyakumar Tasmac Holiday For 2 Days: கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் செப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.29) முதல் செப்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more