இந்த 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

இன்று (ஆகஸ்ட் 28) நீலகிரி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் கனம்ழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அமெரிக்க வரி விதிப்பால் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவி: அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை: அமெரிக்காவின் வர்த்தகப் போர் காரணமாக ஏற்படும் தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இதனால் தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5000 உதவி வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அறிவித்துள்ள 50% வரி விதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதன் … Read more

'அதிமுக யாருக்கும் அடிமையில்லை' எல். முருகன் பேச்சுக்கு செல்லூர் ராஜு பதிலடியா?

Sellur Raju: ஆர்எஸ்எஸ் இயக்கம் அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேசிய நிலையில், அதிமுக யாருக்கும் எஜமானர் இல்லை, யாருக்கும் அடிமை இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி உள்ளார். 

அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த 16-ம் தேதி (ஆக.16) இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, … Read more

விநாயகர் சதுர்த்தி: 4 டன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்த புலியகுளம் முந்தி விநாயகர்

கோவை: விநாயகர் சதுர்த்தியையொட்டி 4 டன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு புலியகுளம் முந்தி விநாயகர் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (ஆக.27) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரசித்தி பெற்ற, ஒரே கல்லால் செய்யப்பட்ட பிரம்மாண்ட விநாயகரான புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க … Read more

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் துரிதமாக செயல்படவில்லை: கே.பாலபாரதி குற்றச்சாட்டு

மதுரை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பானதாக இருந்தாலும், இதை அரசு நிர்வாகம் துரிதமாகச் செயல்படுத்தவில்லை என ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கே.பாலபாரதி நேற்று தெரிவித்தார். மதுரையில் தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை மற்றும் பட்டா குறித்த கணக் கெடுப்பு ஆய்வறிக்கை வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் ச.மகேஸ்வரி தலைமை வகித்தார். செயலர் நா.சரண்யா, பொருளாளர் அழகு ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

மாநில மொழி தெரியாத ஊழியர்களே ரயில் விபத்துகளுக்கு காரணம்: சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை: சமீபகாலங்களில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கு முக்கியக் காரணம், அந்த மாநில மொழி தெரியாத ஊழியர்கள் பணியில் இருப்பதே ஆகும் என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது விநியோகத் திட்டத்தில் உள்ள நிறைகுறைகள் சம்பந்தமாக கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது விநியோக திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், பொது விநியோகத் துறை அலுவலர்கள் … Read more

ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!

சிவகங்கை: சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான தொடக்க விழாவில் கடும் வெயிலால் மாணவர்கள் மரத்தடியில் ஒதுங்கினர். இதனால் ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார். முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் தொடக்கவிழா சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விருந்தினர்கள் அமரும் வகையில் மட்டும் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் … Read more

அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: சிபிஐ

சென்னை: ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு (ஜனவரி 2025) அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் வெளிநாட்டு பொருட்கள் மீதான வரி விகிதங்களை கற்பனை செய்ய முடியாத அளவில் உயர்த்தி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிவிதிப்பு தாக்குதல் … Read more

பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, … Read more