“பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது” – அண்ணாமலை பேச்சு

நெல்லை: “தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெற வைத்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். திருநெல்வேலியில் நடைபெற்ற குமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் அண்ணாமலை பேசியது: “ஒரு போரை படை தளபதிகள் முன்னின்று நடத்துவதைப் போல் தேர்தலில் பூத் முகவர்கள் முன்னின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வரும் 2026 … Read more

“உதயநிதியை பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது…” – ஆ.ராசா

சென்னை: “உதயநிதியை முதல்வராக்கும் திமுகவின் கனவு பலிக்காது” என்று நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசிய நிலையில், “துணை முதல்வர் உதயநிதியைப் பார்த்து அமித் ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார்” என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கூறியுள்ளார். இது குறித்து ஆ.ராசா எம்.பி. வெளியிட்ட அறிக்கையில், “திருநெல்வேலி பாஜக பூத் கமிட்டி … Read more

அமித் ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் அளித்த விருந்தில் 35 வகை உணவுகள்!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் சூடான திருநெல்வேலி அல்வா, வாழைக்காய் சிப்ஸ், முந்திரி பக்கோடா, மோதி லட்டு, ரோஸ் பிஸ்கட், பனீர் டிக்கா, பாதாம், பிஸ்தா, தேநீர், பாசிப்பயறு சுண்டல், வேர்க்கடலை சுண்டல், தட்டாம் பயறு சுண்டல் என 35 வகையான உணவு வகைகள் மற்றும் பானங்கள் … Read more

“வெற்றுக் கூச்சல்களும், ஆரவாரங்களும்” – தவெக மாநாடு குறித்து திருமாவளவன் விமர்சனம்!

சென்னை: 2 மாநில மாநாடுகள் நடத்தியபின்பும் கட்சியின் கொள்கைக் கோட்பாடு என்பது அவர்களுக்கே இன்னும் புரியவில்லை என்று தவெகவினர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வெற்றுக் கூச்சல்களுக்கும், ஆரவாரங்களுக்கும் அடையாளமாக இருந்தது. உருப்படியாக எந்த கொள்கைக் கோட்பாட்டு முழக்கங்களும் இல்லை. ஆக்கப்பூர்வமான எந்த செயல்திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. திமுக வெறுப்பு, திமுக வெறுப்பு, திமுக வெறுப்பு என்பதே அவர்கள் உமிழ்ந்த … Read more

குமரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி தெற்கு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி கடியபட்டணம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் கடற்கரை கிராமத்தில் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டம் செய்தனர். கடியபட்டணம் பேதுரு பவுல் ஆலயம் முன்பிருந்து திரளான பெண்கள் உள்பட … Read more

‘தனி ஆள் இல்லை… கடல் நான்!’ – மதுரை மாநாட்டு செல்ஃபி வீடியோவை பகிர்ந்த விஜய்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரையில் நேற்று (ஆக.21) நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய் தான் எடுத்த செல்ஃபி வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த 2024-ம் ஆண்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் மூலம் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி இருந்தார். அதோடு நேரடி அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் ‘ஜனநாயகன்’ படம்தான் … Read more

“தராதரம் அவ்வளவுதான்…” – முதல்வரை ‘அங்கிள்’ என கூறிய விஜய் மீது கே.என்.நேரு காட்டம்

திருச்சி: “தமிழக முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது தவெக தலைவர் விஜய்க்கு அழகல்ல. அவருக்கு தேர்தலில் பதில் சொல்வோம்” என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் தமிழக முதல்வரை ‘அங்கிள்’ என விமர்சனம் செய்துள்ளார். அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதல்வரை, பெரிய கட்சியின் தலைவரை, 50 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு … Read more

உதயநிதி முதல்வராக மாட்டார்… ராகுல் பிரதமராக மாட்டார் – அமித்ஷா அதிரடி பேச்சு!

Amit Shah Speech: கடைசிவரை உதயநிதியால் முதல்வராக முடியாது, ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது என்று நெல்லையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார்.

“நகை அணிந்து வந்தால் உரிமைத் தொகை கிடைக்காது!” – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கிண்டல்

சாத்தூர்: மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்த பெண்களிடம், ‘கழுத்தில் 4 செயின் அணிந்துவரக் கூடாது. நகைகள் அணிந்து வந்தால் மகளிர் உரிமைத் தொகை கொடுக்க மாட்டார்கள்’ என கிண்டலாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று பதிலளித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. சாத்தூர் அருகே முள்ளிச்சேவல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் சாத்தூர் ராச்சந்திரன் … Read more

இந்தெந்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு? – வானிலை அப்டேட்

Tamil Nadu Rain Forecast: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதை இங்கு காணலாம்.