கூட்டுறவு அங்காடிகளில் சிறிய காஸ் சிலிண்டர் விற்பனை – அமைச்சர் தொடங்கிவைத்தார்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 மற்றும் 5 கிலோ எடையிலான சமையல் காஸ் சிலிண்டர்கள், கூட்டுறவு சிறப்பங்காடிகள், பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். சிறிய அளவிலான சமையல் காஸ் சிலிண்டர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள், சுற்றுலா செல்வோருக்குப் பயனுள்ளதாக இருக்கும். இவற்றைப் பெற எவ்வித முகவரிச் சான்றும் தேவையில்லை. ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட … Read more

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்: லட்சக்கணக்கானோர் தரிசனம்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார் முத்தாரம்மன். இதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரத்திற்காக சிம்ம வாகனத்தில் முத்தாரம்மன், கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளினார். அப்போது அபிஷேக மண்டபத்தில் இருந்து சூரனும் புறப்பட்டு கடற்கரை வளாகத்திற்கு வந்தார். தன் தலையுடன் வந்த சூரனை  முத்தாரம்மன் ஈட்டியால் வதம் செய்தார். 12.05க்கு சூரனின் சிங்க தலையையும் 12.10க்கு எருமை … Read more

போலி பத்திரப் பதிவு; மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்.. தமிழ்நாடு அரசு பதிலளிக் உத்தரவு..!

போலி பத்திரப் பதிவு; மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்.. தமிழ்நாடு அரசு பதிலளிக் உத்தரவு..! Source link

மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும் – சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளை அறிந்துகொள்வதற்காக மால்டா குடியரசு நாட்டின் அமைச்சர் ஜோ-எட்டியென் அபேலா தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை வந்தனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, மால்டா அமைச்சர் சந்தித்து பேசினார். சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவைக் … Read more

ஓராண்டுக்கான படிப்பில் 10 மாதங்கள் பூர்த்தி செய்த பிறகே தேர்வு எழுத வேண்டும்: பெரியார் பல்கலைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஓராண்டுக்கான படிப்பில் 10 மாதங்கள் பூர்த்தி செய்த பிறகே தேர்வெழுதும் திட்டத்தை கொண்டு வர பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த செண்பகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘2012ல் பிஎஸ்சி (கணிதம்) முடித்தேன். 2013ல் பிஎட் முடித்தேன். பெரியார் பல்கலையில், கடந்த 2015ல் எம்எஸ்சி (கணிதம்) முடித்தேன். 9.5.2017ல் முதுகலை பட்டதாரி (கணிதம்) ஆசிரியர் நியமன அறிவிப்பை ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான தேர்வில் 77 … Read more

போராடி தோற்ற இந்திய அணி.!

லக்னோவில் நடைபெற்ற இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கும் – தமிழகத்தில் 2 நாள் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா அருகே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் (அக். 7, 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அக்டோபர் இறுதியில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை … Read more

பாம்பன் பாலத்தை கடந்த 2 படகுகள் பாறைகளில் சிக்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம்:  நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாக் ஜலசந்தி கடல் வழியாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் வந்து சேர்ந்தது. இதுபோல் 2 இழுவை படகுகளும் பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது. படகுகள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்வதற்காக பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. தொடர்ந்து இழுவை கப்பல்களும், மீன்பிடி படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றன. அப்போது 2 மீன்பிடி படகுகள் பாலத்தை … Read more

திருப்பூர் தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவால் 3 குழந்தை உயிரிழப்பு – 11 சிறுவர்கள் உட்பட 12 பேருக்கு சிகிச்சை

திருப்பூர்: திருப்பூரில் செயல்படும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், 11 சிறுவர்கள் உட்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் அவிநாசி சாலை திருமுருகன்பூண்டியில் ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்டோர் தங்கிப் பயின்று வருகின்றனர். செந்தில்நாதன் என்பவர் காப்பகத்தை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக குழந்தைகள் சிலர் உறவினர்களைப் பார்க்கச் சென்றுவிட்டனர். 15 பேர் … Read more