பெட்ரோல் கொடுக்காதீங்க.. பங்குகளுக்கு போலீஸ் உத்தரவு..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதையடுத்து, கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு … Read more

1.82 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் நிறுத்தம்; வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல்: ஓபிஎஸ் 

சென்னை: ” முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் ஆதார் எண் அடிப்படையில் எரிவாயு உருளை, நகைக் கடன் போன்ற விபரங்களை முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், லட்சக்கணக்கான முதியோர்களின் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தியுள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக, … Read more

பத்து மாவட்டங்களில் குண்டு வீச்சு: என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று நிறுவனர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; கோவை உட்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த … Read more

காந்தியை கொன்றவர்களே அவரது நினைவு தினத்துக்கு பேரணி நடத்துவது சூழ்ச்சி: விசிக

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தமிழக முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்துவதாக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில் பேரணி நடைபெறும் இடங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் இந்த பேரணி தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்துக் … Read more

கொள்ளிடம் ஆற்றில் குருவாடி தலைப்பில் மணல் திருட்டால் 5 ஆயிரம் ஹெக்டர் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தா.பழூர்: கொள்ளிடம் ஆற்றில் குருவாடி தலைப்பில் மணல் திருட்டால் 5 ஆயிரம் ெஹக்டர் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனே நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் குருவாடி தலைப்பில் துவங்குகிறது பொன்னாறு. இந்த பொன்னாற்று பாசனம் மூலம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு போகா சம்பா சாகுபடியை சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் நிலம் பாசனம் பெற்று விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மதகை மூடியவாறு ஏற்பட்ட மணல் திட்டு … Read more

தேசிய அளவிலான எறிபந்து போட்டி: தமிழ்நாடு பெண்கள் அணி சாம்பியன்

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான 32வது எறிபந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் டெல்லி அணியும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியும் வெற்றி பெற்றது. எறிபந்தாட்ட பெடரேசன் ஆஃப் இந்தியா மற்றும் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் இணைந்து 32வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான எறிபந்து போட்டி, திண்டுக்கல் பிஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஒரிசா, ஹரியானா, … Read more

திட்டமிட்டபடி நாளை காலாண்டு தேர்வு.. கல்வித்துறை அறிவிப்பு..!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திட்டமிட்டப்படி காலாண்டு தேர்வுகள் நாளை தொடங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அத்துடன், நாளை (செப்.26-ம் தேதி) முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்தது. ஆனால், … Read more

தமிழகத்தில் 3.40 கோடி பேர் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 926 பேர். இதுவரை 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்யடிவர்கள் உள்ளனர்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் 38-வது மெகா தடுப்பூசி முகாமை தமிழக மருத்துவம் … Read more

ஓசில தான போறீங்க… அதுக்குனு இப்படி பேசலாமா? அமைச்சர் பொன்முடி பேச்சால் பகீர்!

தமிழ்நாட்டின் உயர்கல்வி துறை அமைச்சராக இருப்பவர் க.பொன்முடி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். அரசியல், வரலாறு, பொதுத்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர். ”இனமான இளைய பேராசிரியர்” என்று உடன்பிறப்புகளால் அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. அதில், ”உங்க குடும்ப கார்டுக்கு 4 ஆயிரம் ரூபாய். கொடுத்தாரா? இல்லையா? வாங்குனீங்களா? வாயை திறங்க… 4 ஆயிரம் ரூபாய் வாங்குனீங்களா… இப்ப பஸ்ஸுல எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு … Read more

சென்னையில் 11 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை மாதவரம் அடுத்த புழல் புத்தகரம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன், இவருடைய மகன் கார்த்திக் (11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.   சீனிவாசனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  நேற்று இரவு 7 மணி அளவில் சீனிவாசனின் இளைய மகன் கார்த்திக் படுக்கையில், அண்ணன் தம்பி இருவரும் தூக்கு போடுவது எப்படி என்பது பற்றி நடிப்பிற்காக படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பார்த்துள்ளனர்.  இந்நிலையில் … Read more