நுங்கம்பாக்கம் சுவாதி கொலை சம்பவம்: பெற்றோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ராயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கடந்த 2016 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்கிற நபரை காவல்துறை கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணைக்கு ஆஜரான யூடியூபர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு மாறான தகவல்கள் பகிரப்பட்டு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி வாகனங்களுக்கு … Read more

“இபிஎஸ்-தான் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும்”- காரணத்தை விளக்கிய முன்னாள் அமைச்சர் காமராஜ்

“அதிமுக என்பது தொடர்வண்டி போல. அது யாருக்காகவும் நிற்காது. ஓடிக்கொண்டே இருக்கும்” என தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச் செல்வன் பேசினார். தஞ்சையில் அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச் செல்வன் கலந்து கொண்டார்.  அப்போது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, “அதிமுக-வுக்கு எடப்பாடி … Read more

டிக்டாக்யில் ட்ரெண்டாகும் இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் போட்டி..!!

இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைத்து சாப்பிடும் சவால் டிக்- டாக் வீடியோவில் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இப்படி சமைத்து அதனை டிக்- டாக்கில் பலர் வெளியிட்டுள்ளனர். இருமல் மருந்தில் கோழி இறைச்சியை சமைப்பது மிகவும் பாதுகாப்பற்றது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   மருந்தை கொதிக்க வைப்பதால் அதன் பண்புகள் வேறு வழிகளில் மாறும். இருமல் மருந்தில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிடாவிட்டாலும் கூட மருந்தை கொதிக்க வைக்கும் போது … Read more

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க செப்.25 முதல் 3 நாள் நடைபயணம் – தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவிப்பு

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 25-ம் தேதி முதல் 3 நாள் நடைபயணம் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பாஜக தொடுத்து வருகிறது. நீதித் துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை என அனைத்து துறைகளையும் பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் … Read more

கோவை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; பதற்றமான சூழல்: காவல்துறை தீவிர விசாரணை

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா குறித்தும் இழிவாகப் பேசியதாக கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று முன்தினம் 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் பீளமேடு பகுதியில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு உருவபொம்மை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.  இதில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 … Read more

மகாளய அமாவாசை.. இன்று முதல் சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி.!

மகாளய அமாவாசை மற்றும் பிரதோஷத்தை  முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் … Read more

3,200 பெண்களின் அந்தரங்க வீடியோக்கள்!! வசமாக சிக்கிய மருத்துவர்

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஜூ பென் வி, அப்பகுதியில் பிரபல மருத்துவராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண் தனது அந்தரங்க வீடியோக்கள் வைத்திருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அவரை விசாரித்தனர். அப்போது அவரது காலனியில் (ஷூ) ரகசிய கேமரா ஒன்றை பொருத்தி, மருத்துவமனை, மால்கள், கல்லூரிகள், ரயில் நிலையம் என பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு சென்று அவர்களது வீடியோக்களை … Read more

அதிமுக போஸ்டர்களை நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபர்கள்!

கோவை விளாங்குறிச்சி ரோடு 24 ஆவது வட்டக் கழகச் செயலாளர் லட்சுமணன் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உட்பட அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அச்சிட்டு ஒட்டியிருந்தார். கோவை அவினாசி சாலையில் மேம்பலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்ட்டர்களை மர்ம நபர் ஒருவர் போஸ்டர்களை கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் அதே இடத்தில் மீண்டும் அப்பொழுது அதிமுக அரசின் திட்டங்களை விளக்கும் போஸ்ட்டர்களை ஒட்டியுள்ளனர். கோவை அவினாசி … Read more

இது போல மனைவியை பார்த்ததுண்டா..!! தனது கணவருக்கு அவரது காதலியை திருமணம் செய்து வைத்துள்ளார்.!!

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண். டிக் டாக்கில் பிரபலமான இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர். இருவருக்கும் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். … Read more