ஊட்டி என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் கழிப்பிடம்-சுற்றுலா பயணிகள் கடும் அவதி

ஊட்டி :  ஊட்டி என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் கழிப்பறையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த தாவரவியல் பூங்கா அருகே பிரீக்ஸ் பார்க்கிங் தளம், கேசினோ சந்திப்பு அருகேயுள்ள நகராட்சி பார்க்கிங் தளம், பூங்கா … Read more

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிபதி விடுப்பில் சென்றதால் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவல் ஆய்வாளர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ நீதிமன்றம் அறிவித்த வழக்கில், நீதிபதி விடுமுறை என்பதால் அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படவில்லை. சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது … Read more

மியான்மாருக்கு கடத்தப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக: முத்தரசன் வலியுறுத்தல் 

சென்னை: “ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என உறுதியளித்த மத்திய பாஜக அரசு, நடைமுறையில் ஏமாற்றி விட்டதால், தொழிலாளர்கள் அயல்நாடுகளில் அவதிப்படும் கொடுமை ஏற்பட்டிருக்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும். நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலையின்மை பல விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் உயிர் வாழ்வுக்கும், குழந்தைகளின் எதிர்கால … Read more

உடைகிறதா வேலுமணி கோட்டை?.. கொங்கு மண்டல அதிமுகவில் சலசலப்பு..!

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடத்தும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு விளக்க முகாம் நடைபெற்றது. இதில் அழைப்பாளராக கலந்து கொண்ட சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பி கந்தசாமி, மருத்துவ முகாமை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய எம்எல்ஏ; அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் சின்னங்கள் வேறானாலும் எண்ணங்கள் எல்லாம் ஒன்றுதான். எங்கள் எண்ணங்கள் எல்லாம் மக்களின் தொகுதியினுடைய வளர்ச்சிக்காக தான் … Read more

9 அடியில் 1700 முறை பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து மாணவன் சாருகேஷ் சாதனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை வரைந்து பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். தனியார் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவன் சாருகேஷ் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை போற்றும் வகையில் 17 மணி நேரத்தில் அவர் பிறந்த மாதமான ஒன்பதாவது மாதத்தை நினைவு கூறும் வகையில், 9 அடியிலும் சுமார் 1700 முறை அவரது பெயரை பயன்படுத்தியும் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார். பள்ளி … Read more

சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

சிதம்பரம் :  சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் கரையோர கிராமங்களில் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும் நேரங்களில் முதலைகள் ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் மனிதர்களை கடித்து கொன்று விடுகின்றன. மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கும்போதும், ஆற்று வழியாக சிதம்பரம் மற்றும் அதன் அருகே உள்ள செட்டிமேடு, நாஞ்சலூர், பழைய கொள்ளிடம், பெராம்பட்டு, அக்கரை … Read more

'திமுக அரசின் அலட்சியப் போக்கால் தமிழகத்தில் தீண்டாமை அதிகரிப்பு' – ஓபிஎஸ்

சென்னை: “சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும், தமிழ்நாட்டில் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இது தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குக் காரணம் திமுக அரசின் அலட்சியப் போக்கே என்று சொன்னால் அது மிகையாகாது” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது. “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி … Read more

திமுகவில் உட்கட்சி பிரச்சினையா? சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா?

அதிமுகவில் உட்கட்சி மோதல் ஒரு பக்கம் வெடித்துள்ள நிலையில் திமுகவிலும் உட்கட்சி விவகாரங்கள் அவ்வளவு சுமுகமாக இல்லை. உட்கட்சித் தேர்தல் பணிகள் நிறைவடையாமல் இழுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜக வேட்பாளர் சி.ஆர்.சரவஸ்வதியுடம் தோல்வியடைந்தார். சுப்புலட்சுமி வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் சட்டப்பேரவை சபாநாயகர் என திமுக … Read more

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்

காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்ற தலைவரின் வித்தியாசமான முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள். அப்படி என்ன செய்துள்ளார் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்வோம். கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச்செல்ல தூய்மைப்பணியாளர்கள் உள்ளனர். அப்படியிருந்து பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச்செல்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் … Read more

உசிலம்பட்டி அருகே பழமையான கோயிலில் சிலை திருட்டு: போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்கள் குறித்து விசாரணை

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சில்லாம்பட்டி புதுப்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு பழமையான விநாயகர் சிலையை கொண்ட கோயில் தான் இந்த திருட்டு நடந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலின் கருவறையில் இருந்த 3 அடி உயர விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளன. காலையில் … Read more