பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை/ கோவை / மதுரை: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு நேற்று 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவு பிரிவு போலீஸார் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மண்டல ஐஜிக்கள், காவல் … Read more

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: டிஜிபிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த திருவள்ளூர் காவல் துறையினருக்கும், உள்துறை செயலாளர், டிஜிபி-க்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் செப்டம்பர் 27ம் தேதி நிராகரித்துள்ளார். இது நீதிமன்ற … Read more

அமைச்சர் அன்பில் மகேஷூக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், டெங்கு காய்ச்சல் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் … Read more

சமூக நலன் கருதி பல தொண்டுகளை செய்திருக்கிறது பிஎஃப்ஐ: வைகோ

மதுரை: “மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வெள்ள பாதிப்பு காலங்களிலும், தீ விபத்து பகுதிகளிலும் தொண்டாற்றி இருக்கிறது” என்று மதிமுக பொதுச் செயலளர் வைகோ தெரிவித்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது, வெள்ள பாதிப்பு … Read more

வைரலாகும் வீடியோ..!! உயிருடன் சமாதி நிலையை அடைய முயன்ற இளைஞரை மீட்ட போலீசார்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தில் சாது ஒருவர் உயிருடன் சமாதி நிலையை அடைய போவதாக கூறி, மண்ணுக்குள் தன்னை புதைத்துக்கொண்டார். இதை அறிந்த போலீசார் மண்ணைத் தோண்டி அந்த சாதுவை மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், போலீசாருக்கு இந்த சமாதி குறித்து தகவல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் மதரீதியான பழக்கத்தை ஒரு சாது செய்கிறார், இது தற்கொலை செய்வதற்கு சமம் என்று அந்த பத்திரிகையாளர் … Read more

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பிலான திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 6 நாட்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து, சூரசம்ஹார நிகழ்ச்சியைக் … Read more

சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பள்ளி மாணவிகள்..!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் சிந்தூருக்கு சுற்றுலா சென்றனர். அப்போது சகிலேறு ஆற்றில் மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது மாணவிகளில் கும்மாடி ஜெய ஸ்ரீ (14), சுவர்ண கமலா (14), கீதாஞ்சலி (14) ஆகிய 3 மாணவிகள் திடீரென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு … Read more

கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கடனுதவி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, நகைக் … Read more

காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 29, 30-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அக்.1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 29-ம் தேதி … Read more