காரைக்காலில் காலரா பரவலை பேரிடராக அறிவிக்க வேண்டும்: புதுச்சேரி காங்கிரஸ்

காரைக்கால்: காரைக்காலில் காலரா பரவலுக்கு புதுச்சேரி அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், துச்சேரி அரசு இதனை ஒரு பேரிடராக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் அண்மை நாட்களாக ஏராளமானோர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, காலரா பரவல் சூழல் உருவாகியுள்ள நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 4) காரைக்கால் அரசு பொது மருதுவமனையில் வயிற்றுப் போக்கு மற்றும் காலராவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று … Read more

விருதுநகர்: 1100 ஆண்டுகளுக்கு முந்தைய சமண பள்ளியின் தடய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

காரியாபட்டி அருகே 1100 வருடங்களுக்கு முன்பு செயல்பட்ட சமண பள்ளியின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டி புல்லூர் கிராமத்தில் பழமையான இடிந்த கோவில் ஒன்று இருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த போஸ்வீரா மற்றும் மாரீஸ்வரன் ஆகியோர் தகவல் அளித்தனர். இந்த தகவலின் படி, பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த … Read more

முன்னாள் இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்காவில் கெளரவம்; மழை, வெள்ளத்தால் மிதக்கும் சிட்னி… உலகச் செய்திகள்

America event honours Indian defence veterans, Sydney heavy flood today world news: உலக நாடுகளில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். முன்னாள் இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்காவில் கெளரவம் இந்திய ஆயுதப் படை வீரர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்வான ‘வரிஷ்ட யோத்தா’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. பல்வேறு போர்களில் ஈடுபட்ட சில புகழ்பெற்ற வீரர்கள் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜூலை 6 ஆம் தேதி விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் ஜூலை 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு 6-ந் தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 29-ந் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி தினமும் பூஜைகள் நடந்து வருகிறது.  கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில், மார்த்தாண்டம், … Read more

திருச்சி நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் ரெய்டு – கணக்கில் வராத ரூ.31 லட்சம் சிக்கியது..!

திருச்சி நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 31 லட்ச ரூபாய் சிக்கியது. நீதிமன்றம் அருகே இயங்கி வரும் நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் ஒப்பந்தக்காரர்களை கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்தன. அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்ட போது கணக்கில் வராத 31 லட்ச ரூபாய் சிக்கியது. செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் மணி மோகன் ஆகியோரின் வீடுகளில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. Source link

காரைக்காலில் காலரா: நேரடி ஆய்வுக்கு செல்லாத முதல்வர் ரங்கசாமி மீது காங்., அதிமுக விமர்சனம்

புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் காலரா பாதிப்பு தொடர்பாக நேரடி ஆய்வுக்கு முதல்வர் ரங்கசாமி செல்லாததற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸும், கூட்டணிக் கட்சியான அதிமுகவும் விமர்சித்துள்ளன. காரைக்காலில் குடிநீர்க் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீரில் கழிவு நீர் கலந்ததாலும், சுகாதாரமற்ற குடிநீரைப் பருகியதாலும் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகின்றது. காரைக்காலில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் காலரா பரவியுள்ளது. அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 3 நாட்கள் … Read more

’எங்கு பார்த்தாலும் அடியாட்கள்; இப்படியொரு பொதுக்குழுவை பார்த்ததேயில்லை’ – மருது அழகுராஜ்

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருக்கக்கூடிய மருது அழகுராஜ் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்து கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்… ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இணைந்து இயக்கத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்துபோய் அதனின் பொன் விழா ஆண்டில் பிளவை நோக்கிச் செல்கிறது என்ற வருத்தத்தில் இருந்ததால் விடுவித்து கொண்டேன். யாருடைய சுயநலம் இந்த பிளவிற்கு காரணம் என தெரியும். … Read more

காளி போஸ்டரால் சர்ச்சை: கைதுக்கு பதில் லவ்யூ ஹேஷ்டேக் போடச் சொன்ன பெண் இயக்குனர்

‘காளி’ படத்தின் போஸ்டர் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் கோபத்தைத் தூண்டிய நிலையில், பலர் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம்சாட்டி, இயக்குனர் லீனா மணிமேகலையைக் கைது செய்யக் கோரியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று ட்வீட் செய்யப்பட்ட இந்த போஸ்டரில், இந்து தெய்வமான காளி போல் உடையணிந்த பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பதையும், எல்.ஜி.பி.டி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வானவில் கொடியை கையில் வைத்திருப்பதையும் காட்டுகிறது. சுயாதீன திரைப்படத் தயாரிப்பாளரான லீனா மணிமேகலை தனது சமீபத்திய ஆவணப்படமான காளி பட போஸ்டரை … Read more

#பரபரப்பு || பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தும் வகையில், கருப்பு பலூன் விட்ட காங்கிரஸ் கட்சியினர்.!

பிரதமர் மோடியின் ஆந்திரப் பயணத்தின் போது ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கருப்பு பலூன்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட்டவுடன், கருப்பு பலூன்களை வீசியதற்காக 3 காங்கிரஸ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்,  மேலும், விமான நிலையத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்று, கிருஷ்ணா மாவட்ட எஸ்பி சித்தார்த் கவுஷல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  … Read more

திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு !

திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க, மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். பட்டியல் எழுத்தர் பணிக்கு,  பட்டப்படிப்பு படித்தவர்களும், உதவியாளர் பணிக்கு 12ஆம் வகுப்பும், பாதுகாவலர் பணிக்கு 8ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link