இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் – இந்திய தேசிய லீக் வேண்டுகோள்.!

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் நலன் கருதி செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரது இந்த … Read more

கும்பகோணம் அருகே தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி…! உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் தீ விபத்து

கும்பகோணம் அருகே உயர் அழுத்த கம்பி உரசியதால் டிப்பர் லாரி தீப்பற்றி எரிந்தது. தஞ்சாவூர் – விக்ரவாண்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைக்காக டிப்பர் லாரி மூலம் மணல் கொண்டுவரப்பட்டது. மணலை கொட்டுவதற்காக டிப்பரை உயர்த்திய போது மின்கம்பியில் உரசி தீப்பற்றியது. தண்ணீரை வாரி இறைத்தும், டிப்பர் லாரியில் இருந்த தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தியும் தீ அணைக்கப்பட்டது. Source link

“படிப்பு, பட்டம் கடந்து தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்” – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி விழாவில் முதல்வர் அறிவுரை

சென்னை: கல்வி என்பது வெறும் பட்டமல்ல அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தரக்கூடியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் முதல்வர் பேசியது: “இந்தக் கல்லூரி என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு கல்லூரியாக இருந்திருக்கிறது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. நான் சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய ஹாரிங்க்டன் ரோடில் அமைந்திருக்கக்கூடிய எம்சிசி பள்ளியில் தான் எனது பள்ளிப்படிப்பை … Read more

வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் குரங்கு அம்மைக்கு சிகிச்சை

பிரின்சிடோஃபோவிர் மற்றும் டெகோவிரிமாட் ஆகிய இரண்டு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளுக்கு நோயாளிகளின் உடல்நிலை எப்படி பதிலளிக்கிறது என்பது பற்றி இந்த ஆய்வு ஆவணப்படுத்துகிறது. இந்த மருந்துகள் பெரியம்மை நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டன. மேலும், இவை விலங்குகளில் குரங்கு அம்மைக்கு எதிராக சில செயல்திறனை முன்னரே நிரூபித்துள்ளன. குரங்கு அம்மை நோய் பற்றிய ஒரு புதிய ஆய்வு, சில வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அறிகுறிகளைக் குறைக்கக்கூடும். மேலும், நோயாளிக்கு நோய் தொற்றக்கூடிய நேரத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டிருக்கலாம் என்று … Read more

#தமிழகம் || எனக்கு கடன் இல்லையா? பெட்டிக்கடையையை கோடரியால் தாக்கிய மதுபோதை ஆசாமி.! வைரல் ஆகும் வீடியோ.!

செங்கல்பட்டு மாவட்டம், சாலவாக்கம் பகுதியில், கடனுக்கு பொருள் தரவில்லை என்று கடை உரிமையாளரை கோடாரியால் தாக்க வந்த மது போதை ஆசாமி குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சாலவாக்கம் பகுதியில் கந்தசாமி-பரிமள தம்பதி தங்களது வீட்டிலேயே சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற மது போதை ஆசாமி, அந்த கடைக்கு வந்து கடனுக்கு பொருட்களை வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவம் நடந்த நேற்றும் … Read more

மர நிழலுக்காக கடலை கடையில் உருவான கலவரம்.. பூராபேரும் கோபக்காரய்ங்களா இருக்காய்ங்க..!

ஆலங்குடியில் வெயில் கொடுமையால் வேப்ப மர நிழலுக்காக கடலை கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால் உருவான பிரச்சனை, இரு வியாபரிகளிடையேயான மோதலாகி அடித்துக் கொண்ட பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடை வீதியில் ஏராளமான கடலை விதை கடைகள் உள்ளன. இங்கு கடலை விதைகளை வாங்க வந்த விவசாயி விஜய் என்பவர், வேப்பமர நிழலுக்காக தனது இருசக்கரவாகனத்தை தனலெட்சுமி கடலை கடை அருகே நிறுத்தி விட்டு, எதிரில் உள்ள செல்லதுரை என்பவரின் … Read more

சென்னை ஸ்மார்ட் சிட்டி பணிகள்: விசாரணை அதிகாரி டேவிதார் ஆய்வு 

சென்னை: சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விசாரணை அதிகாரி டேவிதார் இன்று நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் மழை – வெள்ளம் தேங்கியது குறித்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கடந்த ஜன.6-ம் தேதி பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. … Read more

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை – என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?

ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விழாவில் என்னென்ன திட்டங்கள் தொடங்கிவைக்கப்படவுள்ளது, யாரெல்லாம் பங்கேற்கவுள்ளனர்? பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னைக்கு வருகை புரியவுள்ளார். பிற்பகல் 3.55 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள பெகும்பெட் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஐ.ஏ.எப். பிபிஜே விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு வந்து இறங்கவுள்ளார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் … Read more

#தமிழகம் || பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை., மூன்று ஜோடி கணவன் மனைவியை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்.! 

ஈரோட்டில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 தம்பதிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த 3 தம்பதிகளை போலீசார் இன்று சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.  நீலப்பாளையம் விநாயகர் வீதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். … Read more

‘ஆன்லைன் கேம்’களுக்கு அடிமை: திருச்சியில் 5 மாதங்களில் 230 சிறார்களுக்கு சிகிச்சை

திருச்சி அரசு மருத்துவமனை இணைய சார்புநிலை மீட்பு மையத்தில் கடந்த 5 மாதங்களில், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 230 சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இணையதளத்துக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த கால கட்டங்களில் ஆன்ட்ராய்டு செல்போன் பயன்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக பள்ளி மாணவர்களின் இணையதள பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்தது. … Read more