'ஆதாயம் தேடி வருபவர்கள் அது கிடைக்காத போது விலகுவது இயல்புதான்' – கவிஞர் சினேகன்

ஆதாயத்தை மட்டுமே எதிர்நோக்கி வரும் நபர்கள் ஆதாயம் கிடைக்காத போது கட்சியில் இருந்து விலகுவது இயல்புதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் சினேகன் தெரிவித்துள்ளார். சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கவிஞர் சினேகன் பங்கேற்றார். இதில், … Read more

அரிசி மீதான 5 சதவீத வரி ரத்தாகும் என எதிர்பார்க்கிறோம்: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம்

மதுரை: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் டி.துளசிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியாவிலுள்ள மாநிலங்களில் அதிகமாக அரிசியை உணவாக உண்ணும் மாநிலம் தமிழகம்தான். விலையில்லா அரிசி வழங்கி பெருமை சேர்த்ததும் தமிழகம்தான். ஜிஎஸ்டியின் 47வது கவுன்சில் கூட்டத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 5 … Read more

குப்பை வண்டியில் கொண்டுவரப்பட்ட உணவு.. முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் நகராட்சி குப்பை சேகரிக்கும் வண்டியில் கொண்டுவரப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து காவிரியில் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை நீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையததைச் சுற்றியுள்ள காவேரி ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் … Read more

இபிஎஸ் பக்கம் டெண்டர் கம்பெனி; ஓபிஎஸ் பக்கம் தொண்டர் அணி: மதுரை ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் ஆவேசம்

மதுரை: ‘‘கே.பழனிசாமி பக்கம் டெண்டர் கம்பெனியை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பவர்கள் தொண்டர் அணியை சேர்ந்தவர்கள் உள்ளனர், ’’ என்று ஓ.பன்னீர்செல்வம் அணி அதிமுக மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரை மாநகர அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது பொறுப்பேற்று மாநகரத்தில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகளை வார்டு வாரியாக சந்தித்துக் கொண்டிருக்கிறார். இன்று அவர் பதவியேற்றப்பிறகு கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை … Read more

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு; மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு அலகுகளை கொண்ட 840 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய மற்றொரு அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்தி … Read more

#Breaking: மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் அருகே அமைந்துள்ள கோவிந்தசாமிபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகிலிருந்த அலமேலு என்ற பெண்மணியின் வீட்டிற்கு உறவுக்கார இளைஞரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.  அப்போது 12-ஆம் வகுப்பு மாணவியுடன் விஜய்க்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அத்தை அலமேலு தெரியவந்த நிலையில் விஜய் ஊருக்கு சென்ற நேரம் பார்த்து மாணவியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து தகராறு … Read more

முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சம்தரும் வீடியோ: வெளியிட்டவர்கள் மீது கேரள அரசின் நடவடிக்கை கோரும் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ”முல்லைப்பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்த அனிமேஷன் வீடியா வெளியிட்டவர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாநகராட்சி வரி செலுத்துவோர் சார்பில், தமிழக அரசு விடுத்துள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்எஸ்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த … Read more

செங்கல்பட்டு: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் முன்னே இரு குழந்தைகள் உயிரிழப்பு

மறைமலைநகர் அருகே டிராக்டரில் சிக்கி இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கருநீலம் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி மற்றும் அவரது குழந்தைகளான சித்தார்த் (4) லோகேஷ் (3) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் இருந்து கருநீலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த ஸ்கூட்டர் மீது தேன்மொழி சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. … Read more

புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை: திமுகவினரிடம் முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று திமுக நிர்வாகிகளிடம் மாநில முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். புதுச்சேரி மாநில திமுக சார்பில் கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி ஏஎப்டி திடலில் இருந்து திமுகவினர் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் ஒதியஞ்சாலை அண்ணா சிலைக்கு பேரணியாக வந்தனர். பின்னர் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் … Read more

குமரி: பாதி எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்த ஆண் சடலம் – போலீசார் விசாரணை

சுசீந்திரம் யானைபாலம் அருகே சாலையோரத்தில் எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் அருகே யானை பாலம் பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி, அடையாளம் தெரியாத நபரை … Read more