அடுக்கடுக்கான கேள்விகள்., திணறிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு… அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதி.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதித்துள்ள நிலையில், நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று நீதிபதி கேள்வி ஏழுப்பினார். ஓபிஎஸ் தரப்பு : கட்சி சட்டவிதிமுறைகள்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டும் என்று … Read more

“தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என … Read more

சென்னையில் 3,000 செல்போன் டவர்களுக்கு வாடகை பெறுவோரிடம் இனி புதிய முறையில் சொத்து வரி வசூல்

சென்னை: சென்னையில் 3,000 செல்போன் டவர்களுக்கான வாடகை பெறுவோருக்கு புதிய முறையில் சொத்து வரி விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி தனது சொந்த வருவாயை உயர்த்த இந்த முடிவை எடுத்துள்ளது. நகர்புறங்களில் பெரும்பாலும் வீடுகளின் மாடியில்தான் செல்போன் டவர் இருக்கும். இந்த டவர்களை நிறுத்த சம்பந்தபட்ட நிறுவனங்கள் அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்த வேண்டும். இப்படி செல்போன் டவர்களுக்கு தங்களின் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த … Read more

நண்பன் ’இலியானா’ பாணியில் பிரசவம்.. இரட்டை கருவை சுமந்த கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம்!

வாணியம்பாடியில் இரட்டை பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு. செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சையளித்ததால் பெண் உயிரிழந்ததாக கணவர் குற்றச்சாட்டு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார் (20). கூலி தொழிலாளியான இவரது மனைவி சங்கரி (19). நிறைமாத கர்ப்பணியான இவர் இன்று அதிகாலை 4:30 மணியளவில் இரட்டை பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிரசவ சிகிச்சையின் போது சிறிது நேரத்திலேயே சங்கிரி உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் சங்கரியின் உறவினர்கள் … Read more

கடலூர்.! தனியார் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!

கடலூர் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மாணவ-மாணவிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். கடலூர் மாவட்டம் கழுதூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்து ஒன்று வழக்கம்போல் இன்று காலை மாணவ மாணவிகளை ஏற்றுக்கொண்டு சென்றது. அப்பொழுது கனகம்பாடி கிராமம் அருகே பேருந்து அதிவேகமாக சென்ற நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கிய மாணவ மாணவிகளை மீட்ட நிலையில், இந்த … Read more

அரை ஆண்டை கடந்த தமிழ் சினிமா… சறுக்கிய மற்றும் சாதித்த திரைப்படங்கள் எவை?

2022 ஆம் ஆண்டின் முதல் பாதி கடந்துவிட்டது. இந்த அரையாண்டில் தமிழ் சினிமாவில் பல படங்கள் எதிர்பார்க்க வைத்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.  கொரோனா தொற்று முடிந்து வெளியான முன்னணி நடிகர்களின் சில படங்கள் பாக்ஸ்ஆபீசின் வசூலை நிமிர செய்தது என்று சொல்லாம். ஆனால் பல படங்கள் பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது. அந்த வகையில் 2022-ம் அரையாண்டில் ரசிகர்களை மனம் கவர்ந்த சில படங்களை பார்க்கலாம் கொரோனா காலகட்டத்தில் ஒடிடி தளங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. தியேட்டர்களில் சிக்கல்களால் … Read more

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளிப்பேருந்து.. மாணவ, மாணவிகள் 16 பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்..!

கடலூர் திட்டக்குடி அருகே சாலையில் மாணவ, மாணவிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளிப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கனகம்பாடி கிராமத்தில் உள்ள ஐவனூர் – ஆலம்பாடி சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் சிறிய காயங்களுடன் தப்பினர். Source link

“அண்ணா பல்கலை. தேர்வில் தோல்வியுற்ற 68% மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு ஏற்பாடு செய்க” – தமாக யுவராஜா

சென்னை: கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாமல் தேர்ச்சிப் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து, முதலாம் ஆண்டு தேர்வெழுதிய 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கரில் 62 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தமாக இளைஞரணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கரோனா பரவலால் கடந்த கல்வியாண்டில் … Read more

PTExclusive 'நமது அம்மா அதிமுகவின் நாளிதழே இல்லை' – OPS ஆதரவு மருது அழகுராஜ் கூறியது என்ன?

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே அதிமுகவின் ஒற்றை தலைமை பொறுப்பை யார் ஏற்பது என்ற சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் அண்மை நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றமும் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் நமது அம்மா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான மருது அழகுராஜிடம் புதிய தலைமுறை சிறப்பு நேர்காணல் நடத்தியிருந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது … Read more

ஊழலில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா

போரிஸ் ஜான்சன் இனி ஆட்சியமைக்க தகுதியற்றவர் என்று கூறி அமைச்சர்கள் மற்றும் அவரது கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.க்கள் அவரைக் கைவிடப்பட்ட பிறகு, போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதை வியாழக்கிழமை அறிவிப்பார். இரண்டு மாநிலச் செயலாளர்கள் உட்பட எட்டு அமைச்சர்கள் கடந்த இரண்டு மணி நேரத்தில் ராஜினாமா செய்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு, பலமிழந்துள்ள போரிஸ் ஜான்சன் தவிர்க்க முடியாமல் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. போரிஸ் ஜான்சன் நாட்டு … Read more