வெஸ்ட் இண்டீஸ் தோல்வி – அபார வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 4வது இருபது ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது. ரிஷ்ப் பந்த், ரோஹித் சர்மா, அக்சர் படேல், மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியின் ஸ்கோர் உயர உதவிகரமாக இருந்தனர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. … Read more

கொடைக்கானல் தாண்டிக்குடியில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். கொடைக்கானலுக்கு ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இயற்கையின் கொடையாக விளங்கும் கொடைக்கானல் மலைப்பகுதி வண்ணத்துப் பூச்சிகளின் (பட்டாம்பூச்சி) வாழ்விடமாகவும் அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மயிலாடும்பாறை, மன்னவனுார், தாண்டிக்குடி, அடுக்கம், பேரிஜம், பேத்துப்பாறை பகுதியில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன. சவுத்தன் பர்ட்விங்க், ரெட்ஹெலன், புளூ மார்மோன், பாரிஸ்பீகாக், நீலகிரி டைகர், பெயின்டட் … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரிடம் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரலில் நடந்த கொள்ளை முயற்சியில், காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு செய்தி உதவியாளராகவும், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆசிரியராகவும் மருது அழகுராஜ் பணியாற்றி வந்தார். பின்னர், நமது அம்மா நாளிதழ் ஆசிரியராக … Read more

கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது – கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், 2022-ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய … Read more

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாநில மனித உரிமை ஆணையத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் விழா மலரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மனித உரிமை பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், கன்னியாகுமரி ஆட்சியர் அரவிந்தன், மதுரை மாநகர காவல் ஆணையர் பி.செந்தில்குமார், … Read more

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு … Read more