சொத்து தகராறு.. அண்ணியை ஓட ஓட வெட்டிய கொழுந்தனார்.. கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

சொத்து பிரச்சனையால் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. அவரது கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவருக்கும் அவரது கணவரின் சகோதரருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று சொத்து பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனால், அங்கிருந்த அரிவாள் மனையால் சுப்ரமணியன் அண்ணி காவேரியை ஓட ஓட வெட்டியுள்ளார், அவரை மீட்ட … Read more

நடிப்பிற்கோர் நடிகர் திலகம்!

இன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவுநாள்…. வசன உச்சரிப்பாலும், முகபாவனையாலும் ஈடுஇணையற்ற நடிகராகத் திகழ்ந்து, உணர்வுப்பூர்வமான நடிப்பால் சிகரம் தொட்டவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.. 1952 ல் அறிமுகமான முதல் திரைப்படமான பராசக்தியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான வசனங்களுக்கு தன்னுடைய சிறப்பான வசன உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.! அபார ஞாபகசக்தியால் மிக நீண்ட வசனங்களையும் ஒரே மூச்சில் பேசும் வல்லமை படைத்தவராகத் திகழ்ந்தார் சிவாஜி… திருவிளையாடல், கந்தன்கருணை … Read more

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உள்துறை செயலர்கே.பணீந்திரரெட்டி வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அரசு பணியில் இருந்து மாநில அரசு பணிக்கு திரும்பி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே.ஏ.செந்தில்வேலன், உளவுத்துறை ஐஜியாகவும், அப்பதவியில் இருந்த என்.இசட்.ஆசியம்மாள் சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பூக்கடை துணை ஆணையர் எஸ்.மகேஸ்வரன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கண்காணிப்பாளராகவும், சென்னை போக்குவரத்து துணை ஆணையர்(வடக்கு) ஆல்பர்ட் ஜான் பூக்கடை … Read more

Tamil News Live Update: குடியரத் தலைவர் தேர்தல்.. வெல்லப் போவது யார்?

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியானது. டிஎன்பிஎஸ்சி  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று முதல் … Read more

#மகாராஷ்டிரா || குழந்தை இல்லாத விரக்த்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

குழந்தை இல்லாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாவட்டம் குல்ரா நகரம் குரேஷி நகர் பகுதியை சேர்ந்தவர் மஸ்ஹர் அலி அன்சாரி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு உள்ளார். அவரது உறவினர்கள் அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை … Read more

குட்கா ஊழல்: முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி அரசுக்கு சிபிஐ கடிதம்

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என 12 பேருக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. சென்னை புறநகரில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட … Read more

10 நிமிடத்தில் டேஸ்டி இஞ்சி சட்னி: இவ்வளவு நன்மை இருக்கு!

இஞ்சி சட்னி செரிமானம் மற்றும் உடல் வலிகளைப் போக்கக்கூடியது. சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. இதை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம். தேவையான பொருட்கள் இஞ்சி – 1/2 கப், கடலை பருப்பு – 2 தேக்கரண்டி , காய்ந்த மிளகாய் – 5கறிவேப்பிலை – தேவையான அளவு, புளி – ஒரு கோலி அளவுவெல்லம் – 1 தேக்கரண்டி, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப, கடுகு … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து.!

செங்கல்பட்டு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருக்குவளைக்கு ஆலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு வில்லியம்பாக்கம் சாலையில் நேற்றிரவு லாரி சென்று கொண்டிருந்து. திடீரென லாரியின் முன்பகுதியில் இருந்து புகை எழுந்ததைக் கண்டு சுதாரித்து கொண்ட ஓட்டுநர் மகிமை தாஸ், உடனடியாகக் கீழே இறங்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடானது. Source link