#மகாராஷ்டிரா || குழந்தை இல்லாத விரக்த்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

குழந்தை இல்லாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாவட்டம் குல்ரா நகரம் குரேஷி நகர் பகுதியை சேர்ந்தவர் மஸ்ஹர் அலி அன்சாரி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு உள்ளார். அவரது உறவினர்கள் அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை … Read more

குட்கா ஊழல்: முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி அரசுக்கு சிபிஐ கடிதம்

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என 12 பேருக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. சென்னை புறநகரில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட … Read more

10 நிமிடத்தில் டேஸ்டி இஞ்சி சட்னி: இவ்வளவு நன்மை இருக்கு!

இஞ்சி சட்னி செரிமானம் மற்றும் உடல் வலிகளைப் போக்கக்கூடியது. சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. இதை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம். தேவையான பொருட்கள் இஞ்சி – 1/2 கப், கடலை பருப்பு – 2 தேக்கரண்டி , காய்ந்த மிளகாய் – 5கறிவேப்பிலை – தேவையான அளவு, புளி – ஒரு கோலி அளவுவெல்லம் – 1 தேக்கரண்டி, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப, கடுகு … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து.!

செங்கல்பட்டு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருக்குவளைக்கு ஆலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு வில்லியம்பாக்கம் சாலையில் நேற்றிரவு லாரி சென்று கொண்டிருந்து. திடீரென லாரியின் முன்பகுதியில் இருந்து புகை எழுந்ததைக் கண்டு சுதாரித்து கொண்ட ஓட்டுநர் மகிமை தாஸ், உடனடியாகக் கீழே இறங்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடானது. Source link

‘‘தமிழ் சமூகத்துக்கு என்ன பயன்?’’ – தூத்துக்குடி ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணியால் சர்ச்சை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைந்துள்ள ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் புனரமைக்கும் பணி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஆர்.டபிள்யூ.டி.இ.ஆஷ். இவர் 1911-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில், விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஞ்சிநாதனும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்திய விடுதலை இயக்கத்தில் இந்த சம்பவம் முக்கிய நிகழ்வாக அமைந்தது. ஆஷ் துரைக்கு தூத்துக்குடியில் … Read more

திருச்சி, சென்னையில் 11 இடங்களில் என்ஐஏ தீவிர சோதனை

திருச்சி/சென்னை: சென்னை, திருச்சியில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவரைத் தங்கவைக்க, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில், இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், என்ஐஏ டிஐஜி காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில், எஸ்.பி. தர்மராஜ் உள்ளிட்ட 50 அதிகாரிகள் நேற்று அதிகாலை மத்திய சிறை சிறப்பு … Read more

மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன்; முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் அரசியல் பின்னணி

Arun Janardhanan  RSS veteran, known Tamil face is temporary replacement for Dhankhar in Bengal Raj Bhavan: மேற்கு வங்க ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஜக்தீப் தங்கருக்கு பா.ஜ.க.,வின் தற்காலிக மாற்றாக தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆர்.எஸ்.எஸ் வீரர்களில் ஒருவரும், தமிழக பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவருமான இல.கணேசன் உள்ளார். தற்போது மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசனுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்: நீட் விலக்கு மசோதா; தமிழக … Read more