தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் ஆக.12 முதல் மாலை நேர உழவர் சந்தைகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

கரூர்: தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, ஆக.12-ம் தேதி முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 இடங்களில் (சென்னை தவிர) தினமும் மாலை 4 மணி முதல் இரவு … Read more

சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான … Read more

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இணைந்து நடத்தும் முதல் மாநில மாநாடு – மதுரையில் இன்று நடக்கிறது

மதுரை: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இணைந்து நடத்தும் முதல் மாநில மாநாடு மதுரையில் இன்று நடக்கிறது. மதுரை விமான நிலையம் அருகே அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் கருப்பசாமி கோயில் அருகே இந்த மாநாடு நடக்கிறது. 146 பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், 47 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், 68 டிஎன்டி சமூகத்தினர் என மொத்தம் 261 சமூகத்தினர் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றனர். இதற்காக சமூகம் வாரியாக 50-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து மாநாட்டு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது குறித்து … Read more

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடந்ததாக ஆதாரம் இருந்தால் எதிர்கொள்ள தயார் – பாஜக தேசிய பொதுச் செயலாளர் கருத்து

திருச்சி: 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால், எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால், எதிர்கொள்ள தயாராக உள்ளோம். திமுக, காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம், அவர்களின் குடும்பத்தை வளர்ப்பதுதான். அவர்களின் முழு நேர வேலையே ஊழல் செய்வது … Read more

ஊறவைத்த பாதாம், திராட்சை… தினமும் காலையில் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அன்றாட உணவு பழக்கம், அதற்கேற்ப வேலை என அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளது. தினம் காலை எழுந்தவுடன் பல் துலக்கி, சூடாக டீ, காபி குடிப்பதை பலர் வழக்கமாக வைத்திருப்பர். அத்துடன் சிலர் உடற் பயிற்சி, யோகா, நடைபயிற்சி செய்வர். அவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. நாள் முழுவதும் புத்துணர்சியுடன் இருப்பதற்கு உகந்ததாகவும் உள்ளது. அந்தவகையில், காலையில் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிடுவது நாள் முழுவதும் எனர்ஜியாக … Read more

அன்புச்செழியன், தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத ரூ.200 கோடி வருவாய் மறைக்கப்பட்டது கண்டுபிடிப்பு

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நடத்தப்பட்ட வருமான வரிசோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.26 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சினிமா பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியன், பைனான்ஸ், திரையரங்கம், ஹோட்டல் உட்பட பல தொழில்களை செய்து வருகிறார். மதுரையில் குடும்பத்துடன் வசித்து வந்த அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகிறார். மருது, ஆண்டவன் கட்டளை, தங்கமகன், … Read more

வெஸ்ட் இண்டீஸ் தோல்வி – அபார வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 4வது இருபது ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது. ரிஷ்ப் பந்த், ரோஹித் சர்மா, அக்சர் படேல், மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியின் ஸ்கோர் உயர உதவிகரமாக இருந்தனர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. … Read more