மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன்; முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் அரசியல் பின்னணி

Arun Janardhanan  RSS veteran, known Tamil face is temporary replacement for Dhankhar in Bengal Raj Bhavan: மேற்கு வங்க ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஜக்தீப் தங்கருக்கு பா.ஜ.க.,வின் தற்காலிக மாற்றாக தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆர்.எஸ்.எஸ் வீரர்களில் ஒருவரும், தமிழக பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவருமான இல.கணேசன் உள்ளார். தற்போது மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசனுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்: நீட் விலக்கு மசோதா; தமிழக … Read more

சொல்லிக் கொடுக்காமல் படி படின்னு அடிச்சா.. புள்ளைங்க எப்படி படிக்கும்..? அரசு பள்ளியில் ஆவேசமான தாய்.!

செஞ்சி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சரியாக தேர்வு எழுதாத 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 72 பேரை பிரம்பால் அடித்த ஆசிரியருக்கு எதிராக பள்ளிவளாகத்துக்குள் புகுந்த பெற்றோர் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது…  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு ஆசிரியர் நந்தகோபால் என்பவர் 72 மாணவர்களை பிரம்பால் தாக்கியதால் பல மாணவர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர் இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் … Read more

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு – முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: பள்ளிபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வீடு, அலுவலகத்தில் நேற்று பொதுப்பணி, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் கடந்த ஆண்டு நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்பீடுகள் சரியாக உள்ளதா என்பது தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் எம்எல்ஏவுமான பி.தங்கமணியின் வீடு உள்ளது. அவர் 2016 முதல் 2021 … Read more

தென் ஆப்பிரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த பழங்கால சிலைகள் கைப்பற்றிய போலீசார்.!

சுவாமிமலையில் இருந்து தென் ஆப்ரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த 6 பழங்கால ஐம்பொன் சிலைகளை போலீசார் கைப்பற்றினர். திருவலஞ்சுழியில் இயங்கி வரும் ஸ்ரீ தர்ஷன் ஆர்ட் மெட்டல்ஸ் என்ற சிற்பக்கலைக்கூடத்தில், தென் ஆப்ரிக்காவிற்கு கடத்துவதற்காக பழங்கால சாமி சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சோதனையிட்ட போது, நடராஜர், கிருஷ்ணர், விநாயகர், அம்மன் என 6 பழங்கால ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.கடை உரிமையாளர் ராமலிங்கத்தை கைது செய்த போலீசார், சிலைகள் திருடப்பட்ட கோவில், அவற்றின் … Read more

மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஜூலை 27-ல் சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் புதிய அறிவிப்பு

சென்னை: “மின் கட்டண உயர்வு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் வரும் 27-ம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 25-ம் தேதி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ”அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி … Read more

திருச்சி சிறையில் குவிந்த என்.ஐ.ஏ அதிகாரிகள்: உள்ளூர் போலீசார் கலக்கம்

 திருச்சி மத்திய சிறை மற்றும் பொன்மலையில் உள்ள ஒருவரின் வீடு என திருச்சியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு;திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு முகாமில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை … Read more

‘இலங்கை புரட்சியை மறந்துவிடாதீர்’ – தமிழக மின் கட்டண உயர்வுக்கு மநீம எதிர்ப்பு

சென்னை: தமிழக அரசு மின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வீடுகளுக்கான மின் கட்டணத்தை 27 சதவீதம் வரை உயர்த்தி தமிழக மின்சாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளது ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மக்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை உடனே வாபஸ் பெற வேண்டும். வீடுகளுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.55-லிருந்து, பயன்படுத்தும் யூனிட்டுக்கு ஏற்ப ரூ.1,130 வரை … Read more

ஜி.எஸ்.டி கூட்டத்தில் வாயில்லா பூச்சியாக தமிழக நிதி அமைச்சர் இருந்தது ஏன்? இ.பி.எஸ் கேள்வி

EPS slams PTR for not opposing 5% GST to certain important food products: அரிசி, கோதுமை, தேன், பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தமிழக நிதி அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாயில்லா பூச்சியாக இருந்தது ஏன் என அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, தேன் உள்ளிட்டப் … Read more

ஒரே வருடத்தில் உபா சட்டத்தின்கீழ் 796 வழக்குகள் பதிவு – மத்திய அரசு.!

உபா சட்டத்தின்கீழ் கடந்த 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக 796 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 18ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அடிக்கடி அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.  இதற்க்கு மத்தியில், உபா சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை இன்று மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளது.  அதில், தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின் அடிப்படையில் … Read more