கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது – கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், 2022-ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய … Read more

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மாநில மனித உரிமை ஆணையத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் விழா மலரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மனித உரிமை பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், கன்னியாகுமரி ஆட்சியர் அரவிந்தன், மதுரை மாநகர காவல் ஆணையர் பி.செந்தில்குமார், … Read more

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு … Read more

உரிமம் பெற்ற மணல் குவாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முறையாக உரிமம் பெற்று இயங்கும் மணல் குவாரிகளை, சட்டவிரோத குவாரிகள் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை 50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், பெரும்கடம்பனூர், இளம் கடம்பனூர் மற்றும் சிரங்குடி புலியூர் ஆகிய கிராமங்களில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த கோரி பெரும்கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் … Read more

சென்னையில் மெட்ரோ நிலையங்களுடன் முக்கியப் பகுதிகளை இணைக்கும் சிற்றுந்துகள்

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களையும் முக்கியப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் சிற்றுந்து சேவையை தமிழகப் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிப்பர்கள் மெட்ரோ ரயில் நிலையம் வந்து செல்லும் வகையில் இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து ஐந்து புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சேப்பாக்கம் … Read more

Post Office Income: மாதம் ரூ4950 வருமானம்; இந்த ஸ்கீம் எப்படின்னு பாருங்க!

ஒரு சிறப்புத் திட்டம் அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படுகிறது, இதன் மூலம் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஆண்டுக்கு ரூ.59,400 சம்பாதிக்கலாம். இந்தத் திட்டத்தின் பெயர் போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்), இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைப் பெறுவீர்கள். இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.4,950 சம்பாதிக்கலாம். கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம். அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ், நீங்கள் ஆண்டுக்கு 6.6% மாதந்தோறும் வட்டி பெறுவீர்கள். தபால் அலுவலக மாதாந்திர … Read more