சென்னையில் இன்று( ஜூலை 24-ம் தேதி) எந்த ஏரியாவில் மின் தடை?

சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர்/சிட்கோ துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் அம்பத்தூர் பகுதி : சிட்கோ; 5வது, 6வது, 7வது தெருக்கள், கண்ணன் கோவில் தெரு. மேலும், சென்னையில் 25.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி.. ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க … Read more

போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை – தமிழக அரசு அறிக்கை வெளியீடு

மதுரை: போலி பாஸ்போர்ட் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் உட்பட 41 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் இலங்கையைச் சேர்ந்த சிலர் 2019 செப்டம்பரில் இந்திய பாஸ்போர்ட் பெற்று, வெளிநாடு செல்ல முயற்சி செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின்படி, அவ்வாண்டு … Read more

குட்கா ஊழல் | விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை – சிபிஐ-க்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சிபிஐ-க்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கோரவும், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சென்னை புறநகர் செங்குன்றத்தில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் வருமான வரித் துறையினர் … Read more

அடர்ந்த பனிக்குள் ஒரு ஓநாய் தெரிகிறதா? 18 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

சமீப காலமாக ஆப்டிக்கல் இல்யூஷன் பற்றிய படங்கள் இணையத்தில் அதிகம் உலா வந்துகொண்டிருக்கின்றன. ஒரு படத்தை சாதாரணமாக பார்க்கும்போது ஒரு மாதிரியாகவும், அதையே உற்று நோக்கும்போது வேறு பரிணாமத்திலும் தெரியும். இதில் சில பபடங்களில் உற்று நோக்கும்போது அதில் பல உருவங்கள் தெரியும் அளவுக்கு உருவாக்கியிருப்பார்கள். ஆப்டிக்கல் இல்யூஷன் என்று அழைக்கப்படும் இந்த மாதியான புகைப்படங்கள் நமக்கு ஆச்சிரியத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் நமது மூளைக்கும் நல்ல வேலை கொடுக்கும் வகையிலும் இருப்பது சிறப்பானது. அந்த வகையில் தற்போது … Read more

41 பேர் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் – தமிழக அரசு விடுத்த அறிக்கை.!

விரைவில் போலி கடவுச்சீட்டு விவகாரத்தில் 41 பேர் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக, தமிழக அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அந்த அறிக்கையில், “செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு மதுரையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சில நபர்கள் இந்திய கடவுச்சீட்டுகள் பெற்று வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் 27.09.2019 அன்று மதுரை நகர க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் 1967 ஆம் ஆண்டைய கடவுச்சீட்டு … Read more

4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: 27-ம் தேதி பரவலாக கனமழை பெய்யும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24, 25, 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். 27-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல்,திருச்சி, பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, … Read more

விமானத்தில் மயங்கிய பயணி; முதலுதவி அளித்த தமிழிசை சௌந்தரராஜன்; குவியும் பாராட்டு

Tamilisai Soundararajan treat first aid to fainted co-passenger in flight: நடுவானில் விமானத்தில் மயக்கமடைந்த பயணிக்கு தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை செளந்தரராஜன் முதலுதவி அளித்த நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று அதிகாலை 3 மணிக்கு டெல்லியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ​​ஒரு பயணி திடீரென மயக்கம் … Read more

திருவாரூர்: மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் பலி.!

திருவாரூரில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மதன்ராஜ்(20) என்பவர் வலங்கைமானில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒன்று மதன்ராஜ் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பலத்த காயமடைந்த மதன்ராஜை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். … Read more

புத்தகம், எழுதுகோலுடன் கள்ளக்குறிச்சி மாணவி உடல் நல்லடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய புத்தகம் மற்றும் எழுதுகோலுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் இறுதி அஞ்சலி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கடந்த 17-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. வன்முறைக் கும்பல் பள்ளி … Read more