ரூ. 70 லட்சம் கேட்டு தொழிலதிபரை காரில் கடத்திய மர்ம கும்பல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை 6 மணி நேரத்தில் போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர். கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த தொழிலதிபரான சந்திரசேகரன் என்பவர் நேற்று காலை  5 மணி அளவில் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது 5பேர் கொண்ட கும்பல் பொலீரோ காரில் கடத்தி சென்றது. இது தொடர்பான மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் எண்கள் மூலம் துப்பு … Read more

கீழமை நீதிமன்ற உத்தரவுகளை வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கீழமை நீதிமன்றங்களின் உத்தரவுகளை நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை 300 கிலோ கஞ்சா கடத்தலுக்கு உதவி செய்ததாகப் போதை தடுப்புப் பிரிவு சிறப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி பிரபாகரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனுத் தாக்கல் … Read more

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 16 ஈழத்தமிழர்களை விடுதலை.. தமிழக அரசுக்கு சீமான் நன்றி.!

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 16 ஈழத்தமிழர்களை விடுவித்ததற்கு தமிழக அரசுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 16 ஈழத்தமிழர்களை விடுவித்ததற்கு தமிழக அரசுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.  இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “திருச்சி, சிறப்பு முகாமில் இருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ந்தேன். நீண்ட நெடு நாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப் போராட்டத்திற்கும், கருத்துப் பரப்புரைக்கும் … Read more

மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மாமியார்… மகளை தாக்கியதால் ஆத்திரம்..! வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

மகளை தாக்கிய மாப்பிள்ளையை விருந்துக்கு வந்த இடத்தில் மாமியார் வீதியில் வைத்து உருட்டு கட்டையால் புரட்டி எடுத்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே அரங்கேறி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்து ஜிஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரீத்தா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் போதையில் அடித்து உதைத்ததால் மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. … Read more

வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது?

திருப்பூர்: தமிழக வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் வனக்காப்பாளர்கள், வனவர் பதவி வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக வனத்துறையில் வனவர் – 1300 பேர், வனச்சரகர் – 585 பேர், வனக்காப்பாளர் – 2400 பேர், வனக் காவலர்கள் -1300 பேர் என சுமார் 6 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். வனக்காப்பாளர்கள் முழுமையாக களப்பணியாற்றுபவர்கள். குறிப்பிட்ட வனப்பகுதியில் விலங்குகள் வந்தால் கண்காணிப்பது, மீட்புப் பணி, மரம் விழுந்தால் சீரமைப்பது உட்பட அனைத்து … Read more

பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்க திட்டமா? – உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணி தீவிரம்

சென்னை: ஒற்றைத் தலைமைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதால் ஓபிஎஸ்ஸை, 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கட்சியை விட்டு நீக்க இபிஎஸ் தரப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் கடந்த 14-ம் தேதி முதல் ஒற்றைத் தலைமை விவகாரம் அனல் பறந்து வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்துக்கு ஓபிஎஸ் சென்றார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக ஒற்றைத் தலைமை … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக 3-ம் தேதி தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 4-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். … Read more

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு தமிழகம், புதுச்சேரியில் ஆதரவு திரட்டினார்

சென்னை/புதுச்சேரி: குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திரவுபதி முர்மு நேற்று தமிழகம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, ஆதரவு திரட்டினார். தனி விமானத்தில் நேற்று சென்னை வந்த திரவுபதி முர்மு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்எல்ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். முதல் அமர்வில், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், முரளிதரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் … Read more

ஏமாற்றத்தில் ஓபிஎஸ்… அந்த 4 பேருக்கு நன்றி…. அதிகாலை முதல் 'ஈ' ஓட்டம்.!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மொத்தம் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில், 2400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவின் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும், வரும் 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. அதிமுகவில் … Read more

கூட்டுறவு அங்காடியில் ‘கருப்புக்கவுனி அரிசி’ விற்பனையை அதிகரிக்க அறிவுறுத்தல்

சென்னை: கூட்டுறவு அங்காடியில் ‘கருப்புக்கவுனி அரிசி’ விற்பனை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். சென்னை ஆழவார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் வளாகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவு, உணவு (மற்றும்) நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பருப்பு வகைகள் மற்றும் சிறுதானியங்கள், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் வகைகள், மஞ்சள், … Read more