“மம்தா போன் செய்து ஆளுநரின் அத்துமீறல் குறித்து கவலை தெரிவித்தார்” – மு.க.ஸ்டாலின் ட்வீட்

மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும் என மேற்குவங்க முதல்வரிடம், தமிழக முதல்வர் உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போன் செய்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க ஆளுநர் செயல்பாடு குறித்து பேசினார். அப்போது மம்தா பானர்ஜியிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும் என உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் அதிகாரத்தை … Read more

மு.க ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்ட மம்தா: விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டம்

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அரசிலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ம் தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டார். இதனால், மேற்கு வங்க மாநில அரசியலில் … Read more

நாளை முதல் வழக்கம் போல் மின்சார ரயில் சேவை.!

சென்னையில் நாளை முதல் முழு அளவு எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த சூழலில் சென்னை புறநகர் ரயில் சேவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா காலத்திற்கு … Read more

பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: மேலும் 90 பவுன் நகை சிக்கியது; சீருடையில் இருந்து ரூ.25 ஆயிரமும் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விடிய விடிய நடத்திய சோதனையில் மேலும் 90 பவுன் நகை சிக்கியது. அத்துடன் பணிமுடிந்து வந்த பின்பு வீட்டில் காக்கி சீருடையை சோதனையிட்டபோது அதில் இருந்து ரூ.25 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கண்மணி(52). இவரது கணவர் சேவியர் பாண்டியன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் உதவி இயக்குனராக உள்ளார். கண்மணி … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென பெய்தமழையால் காய வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் நனைந்தன. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்களும் நனைந்தன. இந்தச் சூழலில் தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே … Read more

ஹிஜாப் பிரச்னை; உ.பி தேர்தலுக்கான சதி: திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ் பேச்சு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் கண்டனக் கூட்டம் 12.02.2022 ஆம் தேதி மாலை ஐந்து மணி அளவில் முகநூல் நேரலையில் மூலம் நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியை சேர்ந்த கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தமிழன் பிரசன்னா, மறுமலர்ச்சி … Read more

#சென்னை || வாக்கு கேட்க சென்ற பாஜக பிரமுகரின் மண்டையை உடைத்த திமுக பிரமுகர்.!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாஜக மண்டல துணைத் தலைவரின் மண்டையை, திமுக பிரமுகர் உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்கு பதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், … Read more

காணாமல் போன சிறுமியை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர் <!– காணாமல் போன சிறுமியை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 3 மணி… –>

பண்ருட்டி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 3 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற சிறுமி சில நாட்களாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை திடீரென சிறுமி மாயமான நிலையில், அது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பண்ருட்டி நகர பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் … Read more

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று (13-02-2022) மாலை காணொலி வாயிலாகத் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: தென்னவன் சிறுமலை என்று சிலப்பதிகாரக் காப்பியத்தில்-இளங்கோவடிகளால் போற்றப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற நகரமான இந்த திண்டுக்கல்லில் … Read more

10, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாதாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக புகார்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு சில பள்ளிகள் மூலம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் … Read more