அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் பிலடெல்பியா மாகாணம் லெமன் ஹில்ஸ் டிரைவ் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நேற்று இரவு இளைஞர்கள் பலர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இளைஞர், இளம்பெண் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை … Read more

ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொலை – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ … Read more

புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ. 80 ஆயிரம் அபராதம்

சிங்கப்பூர், சிங்கப்பூர் நாட்டின் தோ பாயோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சண்முகானந்தம் ஷியாமலா (வயது 70) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு தனது வீட்டிற்கு அருகே புறாக்களுக்கு உணவு அளித்துள்ளார். சிங்கப்பூரில் பொதுவெளியில் பறவைகள், விலங்களுகளுக்கு உணவு அளிக்க வேண்டுமென்றால் வனவிலங்குகள் மேலாண்மை அதிகாரியிடமிருந்து அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், ஷியாமலா எந்த வித அனுமதியுமின்றி வீட்டில் புறாக்களுக்கு உணவு அளித்துள்ளார். இது தொடர்பாக … Read more

வெளிநாட்டு மாணவர் விசா நேர்காணல்களுக்கு தற்காலிக தடை: அமெரிக்கா தடாலடி நடவடிக்கை

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் ஏற்பட செய்வேன் என கூறி வருகிறார். இந்நிலையில், குடியேற்றம் மற்றும் விசா தொடர்பாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் நேற்று புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. வகுப்புகளை பாதியில் நிறுத்துதல் அல்லது வகுப்புகளுக்கு செல்லாமல் தவிர்த்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், அந்த மாணவரின் விசா ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த … Read more

ஸ்பெயினில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி

மாட்ரிட் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். இதற்காக படகு மூலம் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் … Read more

‘அமெரிக்காவுடன் இணைந்தால் கோல்டன் டோம் பாதுகாப்பு இலவசம்’ – கனடாவுக்கு ட்ரம்ப் சலுகை! 

வாஷிங்டன்: கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரூத் சமூக ஊடக தளத்தில் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் அற்புதமான கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் ஓர் அங்கமாக விரும்பும் கனடாவிடம், ஒரு தனித்த சுதந்திர தேசமாக சேர விரும்பினால் 61 பில்லியன் டாலர் அதற்காக செலவாகும். ஆனால், அவர்கள் எங்களின் நேசத்துக்குரிய 51-வது மாநிலமாக … Read more

இந்த ஆண்டில் சுனாமி? காத்திருக்கும் பேரழிவு.. மிரளவைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

Covid prediction: தற்போது பரவ தொடங்கி உள்ள கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து 2030ஆம் ஆண்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.   

சூடானில் காலரா நோய் பாதிப்பு : ஒரே வாரத்தில் 170 பேர் பலி

சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தலைநகரான கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சூடானின் சுகாதார மந்திரி ஹைதம் இப்ராஹிம் கூறுகையில், “கடந்த நான்கு வாரங்களில் கார்ட்டூம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை … Read more

இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்வு

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது: ஷெபாஸ் ஷெரீப்

இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், … Read more