அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்து: 2 பணியாளர்கள் பலி

அமெரிக்காவில், சிறிய ரக மருத்துவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 பணியாளர்கள் உயிரிழந்தனர். அலபாமா மாகாணத்தில் உள்ள செல்சியாவில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, மருத்துவமனைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து 3 பணியாளர்களுடன் மருத்துவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில், ஹெலிகாப்டர் தீ பிடித்து கீழே விழுந்ததாகவும், அதிலிருந்தவர்களில் ஒருவர் அதே இடத்தில் இறந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் … Read more

மெக்டொனால்ட் நிறுவன அமெரிக்க அலுவலகங்கள் தற்காலிக மூடல்

பர்கர் உணவு சங்கிலி நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் கார்ப் அதன் அமெரிக்க அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. Source link

108 வயதில் 7வது ஆல்பத்தை வெளியிடவிருக்கிறார் பிரான்ஸை சேர்ந்த உலகின் மிக வயதான பியானோ கலைஞர்!

பிரான்ஸை சேர்ந்த உலகின் மிக வயதான பியானோ கலைஞரான கொலெட் மேஸ் என்கிற மூதாட்டி 108 வயதில் தனது 7வது ஆல்பத்தை வெளியிடவிருக்கிறார். 1914ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன் பிறந்த கொலெட் மேஸ், தனது 5வது வயதில் தொடங்கி, நூறு ஆண்டுகளைக் கடந்து பியானோ வாசித்து வருகிறார். வரும் ஜூன் மாதம் 109வது வயதில் அடியெடுத்து வைக்கும் இவர் இன்றும் துறுதுறுவென சிறு குழந்தை போல் இயங்குகிறார். இதுவரை 6 ஆல்பங்களை … Read more

அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய கடும் சூறாவளி: 32 பேர் பலி; பலர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளிகள் புரட்டிப்போட்ட நிலையில் அங்கே இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். சூறாவளிகளால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” அமெரிக்காவின் மிஸிஸிப்பி மற்றும் அலபாமா மாகாணங்களில் கடந்த வாரம் வீசிய அதிசக்திவாய்ந்த சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சுமார் 23 பேர் வரை உயிரிழந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மீண்டும் அமெரிக்காவை சூறாவளிகள் தாக்கியது. இதில் மெம்பிஸ், டென்னஸி ஆகிய மாகாணங்கள் … Read more

பெரிய அளவில் பணி நீக்கம் செய்ய தயாராகும் McDonald நிறுவனம்!

Mcdonald’s US Office Layoff: உலகின் மிகப்பெரிய துரித உணவு சங்கிலிகளில் ஒன்றான McDonald’s இந்த வாரம் அமெரிக்காவில் உள்ள அதன் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடவுள்ளது. புதிய சுற்று ஆட்குறைப்பு குறித்து தனது நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்க நிறுவனம் தயாராகி வருகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. திங்கள் முதல் புதன்கிழமை வரை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்குமாறு நிறுவனம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கு கடந்த வாரம் மின்னஞ்சல் அனுப்பியது. மெக்டொனால்டு இந்த … Read more

ஈபிள் கோபுரம் அருகிலேயே மினி ஈபிள் கோபுரம் ஒன்றை உருவாக்கி காட்சிப்படுத்திய பிரான்ஸ் கலை நிபுணர்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் அருகிலேயே மினி ஈபிள் கோபுரம் ஒன்றை  உருவாக்கி காட்சிப்படுத்திய பிரான்ஸ் கலை நிபுணர் ஒருவர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். ஏப்ரல் முதல் நாளன்று ஒரே நாளில் நிறுவப்பட்டுள்ள இந்த மினி ஈபிள் கோபுரத்துக்கு ஈபிலா என பெயரிடப்பட்டுள்ளது .இதனை உருவாக்கிய பிலிப் மைண்ட்ரோன் , பெரிய ஈபிள் கோபுரத்தின் 10-ல் ஒரு பங்கு பாகங்கள் மூலம் மினி ஈபிள் டவரை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். பாரிசில் 2 வார காட்சிக்கு … Read more

சரணடையும் ட்ரம்ப்; ஆயத்தமாகும் நியூயார்க் நகரம்: வன்முறைகளை தவிர்க்க போலீஸ் குவிப்பு

நியூயார்க்: ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் விரைவில் சரணடைவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப் சரணடையும்போது போராட்டங்கள் நடந்தால் அதை கண்காணிக்கவும், வன்முறைகளைத் தவிர்க்கவும் நியூயார்க் நகரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற … Read more

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – உக்ரைன் அமைச்சர்!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 363 விளையாட்டு கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விளையாட்டுதுறை அமைச்சர் தெரித்துள்ளார். அடுத்தாண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும், கடந்தாண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனிய தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் நாட்டைப் பாதுகாக்க தானாக முன்வந்து ஆயுதம் ஏந்தி போரிட்டதாகவும் தெரிவித்தார்.  Source link

சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

பிரமாண்டமான பிரபஞ்சத்தில்  இன்று வரை மிகப்பெரிய ரகசியமாகவும் மர்மமாகவும் உள்ள ஒரு   பொருள் கருந்துளை என்று தான் சொல்ல வேண்டும். இதில் அப்படி என்ன மிகப்பெரிய ரகசியம் உள்ளது என்று கேட்டால், இது இயற்பியலுக்கு அப்பாற்பட்டு செயல்படக்கூடியது. தற்போது இருக்ககூடிய எந்த இயற்பியல் விதிகளும் இந்த கருந்துளைக்கு பொருந்தாது என்பது தாம் மிகவும் ரகசியமான மர்மமான விஷயமாக உள்ளது. நாம் வசிக்கும்  இந்த பூமி சூரிய குடும்பத்தைச் சார்ந்தது. சூரியனைப் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்ததுதான் பால்வெளி … Read more