சூடானில் கடும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவமும் ஏழு நாள் போர் நிறுத்தம்!

சூடானில் கடும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவமும் ஏழு நாள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளன. இருதரப்புக்கும் இடையே நீடித்து வரும் மோதல் காரணமாக இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் தென் சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இருதரப்பிலும் சமாதானப் பேச்சுகளுக்காக பிரதிநிதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும், அவர்கள் விரும்பும் இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை சூடானை விட்டு 73 ஆயிரம் பேர் வெளியேறி விட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஒருவார … Read more

இந்தியாவில் மத சுதந்திர மீறல்கள்: அமெரிக்க அமைப்பு அறிக்கை| Religious Freedom Violations in India: US Organization Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி, அமெரிக்க அரசுக்கு, அந்நாட்டைச் சேர்ந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் என்ற அமைப்பு, உலகெங்கும் உள்ள மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இது, இந்த அறிக்கையை அந்நாட்டின் வெளியுறவுத் துறையிடம் சமர்ப்பிக்கும். ஆனால், அந்த … Read more

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றால் புதின் கைது செய்யப்படலாம்?

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் கலந்துக் கொண்டால் அவர் கைதுசெய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு தென் ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.போர்க்குற்றங்களுக்காக புதினைக் கைது செய்ய வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் வாரண்ட் பிறப்பித்தது. இது குறித்து ஆய்வு செய்ய தென் ஆப்பிரிக்க அதிபர் … Read more

கனடாவில் தேடப்படும் குற்றவாளி பட்டியல்: இந்திய வம்சாவளி கோல்டி பிரார் சேர்ப்பு| Canadas Most Wanted Offenders List: Addition of Indian-origin Goldi Brar

மான்ட்ரீல்: பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில், மூளையாக செயல்பட்ட தாதா கோல்டி பிரார் என்ற சதீந்தர் சிங் பிராரை, ‘தேடப்படும் டாப் – 25 குற்றவாளிகள்’ பட்டியலில், கனடா அரசு சேர்த்து உள்ளது. பஞ்சாபின் மன்சா மாவட்டத்தில் உள்ள மூசே கிராமத்தில், 2022 ஜூன் 29ல், பிரபல பாடகர் சித்து மூசேவாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில், வட அமெரிக்க நாடான, கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாதாகோல்டி பிரார் இருப்பதுதெரிய வந்தது. … Read more

முடிசூட்டு விழாவில் மன்னர் சார்லஸ் அணியவிருக்கும் தங்க ஆடைகள் தயார்..!

பிரிட்டன் மன்னர் சார்லஸ், முடிசூட்டு விழாவின் போது அணியவிருக்கும் நூற்றாண்டு பாரம்பரியமிக்க தங்கத்திலான ஆடைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வருகிற 6ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. அதில் மன்னர் சார்லஸ் இரண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஆடைகளை அணியவிருக்கிறார். இதில் ஒரு ஆடை 1821ம் ஆண்டு அப்போதைய மன்னர் 4ம் ஜார்ஜுக்காகவும், மற்றொன்று 1911ம் ஆண்டு மன்னர் 5ம் ஜார்ஜுக்காகவும் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆடைகளை ராணி எலிசபெத் அவரது முடிசூட்டு விழாவின் … Read more

மலேசிய கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் தீப்பற்றி விபத்து.. 3 பணியாளர்கள் மாயம்..!

தெற்கு மலேசிய கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த பணியாளர்கள் 3 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபோன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ‘எம்.டி பாப்லோ’ என்ற எண்ணெய் கப்பல், 28 பணியாளர்களுடன் சீனாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திங்கட்கிழமை மாலை மலேசியாவின் Tanjung Sedili கடற்பகுதியில் சென்ற போது, கப்பலில் தீடிரென தீப்பற்றி கரும்புகை எழுந்தது. தகவலறிந்த மலேசிய கடலோர காவல்படையினர், ரோந்து படகில் சென்று 25 பணியாளர்களை … Read more

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க உக்ரைன் விவசாயி நூதன முயற்சி

உக்ரைன் நாட்டு விவசாயி ஒருவர், வேளாண் நிலத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் டிராக்டரை இயக்கி கண்ணிவெடி சோதனை நிகழ்த்தி வருகிறார். கார்கீவ் மாகாணத்திலிருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் அங்கு ஏராளமான கண்ணிவெடிகளை புதைத்துவிட்டுச் சென்றுள்ளன. இதனால், விவசாயிகள் பலர் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். விதைக்கும் பருவம் நெருங்கி இருப்பதால், விவசாயி ஒருவர் இதற்கு மாற்று வழி கண்டுபிடித்துள்ளார். ரஷ்ய படைகள் விட்டுச்சென்ற பீரங்கியின் கவசத்தை கழற்றி, தனது டிராக்டர் மீது பொருத்தி, அதனை ரிமோட் … Read more

ஜனநாயகத்தின் பாதுகாவலன் : இன்று மே.03 பத்திரிகை சுதந்திர தினம்| Guardian of Democracy : Today May 03 is Press Freedom Day

உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளை உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உலகில் உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரத்தை காப்பது, பத்திரிகையாளர் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக ஐ.நா., சார்பில் 1993 முதல் மே 3ல் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப் படுகிறது. ஆபத்து காலத்தில் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனத்துக்கு ‘யுனெஸ்கோ’ சார்பில் … Read more

உக்ரைன் போரில் ரஷிய ராணுவ வீரர்கள் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்- அமெரிக்கா

வாஷிங்டன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறியதாவது:- உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் உக்ரைன் போரில் சமீபத்தில் 20,000-க்கும் அதிகமான ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டிசம்பரில் இருந்து ரஷியா 100,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை சந்தித்துள்ளது, 80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் ராணுவ கம்பெனியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெரும் உயிரிழப்பு பஹ்மத் என்ற சிறு நகரை … Read more