சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி… காரில் வைத்து பிரசவம் பார்த்த தன்னார்வலர்கள்..!

சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் கர்ப்பிணி பெண் ஒருவர் காரில் குழந்தை பெற்றுள்ளார். அங்கு 2 வாரங்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரால் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கிழக்கு நைல் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த மனைவியை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். வழியில், மருத்துவ சேவையாற்றி வந்த தன்னார்வலர்கள் 3 பேர் காரில் வைத்தே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அப்பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தன்னார்வலர்களை பெற்றோர் … Read more

சீனாவில், சுரங்கங்களில் நேரிடும் விபத்துகளை குறைக்க ‘ஸ்மார்ட்-மைனிங்’ தொழில்நுட்பம் மூலம் சுரங்கப்பணிகள்..!

சீனாவில், நிலக்கரி சுரங்கங்களில் நேரிடும் விபத்துகளை குறைக்க, சுரங்கப் பணிகளை கணிணி மையமாக்கும் பணிகள்  நடைபெற்றுவருகின்றன. உலகளவில், நிலக்கரி உற்பத்தியில், 50 சதவீதத்திற்கும் மேல் சீனாவில் வெட்டி எடுக்கப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் சுரங்க விபத்துகளில் அங்கு 250 பேர் உயிரிழந்தனர். அதனை குறைக்கும் முயற்சியாக, சில சுரங்கங்களில், 5-ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஸ்மார்ட் மைனிங் முறையில் நிலக்கரி வெட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சுரங்கத்தின் மேலிருந்தபடி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் எந்திரங்களால் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதன்மூலம் … Read more

65 வயது மச்சாக்கார மேயர்…! 16 குழந்தைகள் இருந்த போதும் 16 வயது அழகியை 7வதாக திருமணம் செய்தார்

பிரேசிலின் பரானா மாகாணத்தின் அரவுகாரியா நகராட்சியின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி (65) கடந்த மாதம் 16 வயதுடைய காவான் ரோட் காமர்கோ என்ற சிறுமியை பெண் திருமணம் செய்து கொண்டார். மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனிக்கு இது 7வது திருமணமாகும், இதற்கு முன்னதாக 6 திருமணம் நடைபெற்று உள்ளது. அவருக்கு 1980ல் முதல் திருமணம் நடைபெற்றது. 6 திருமணங்களில் மேயர் ஹிசாம் ஹூசைனுக்கு மொத்தம் 16 குழந்தைகள் உள்ளனர். மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி திருமணம் … Read more

வெனிசுலா நாட்டவர்களை தடுத்து நிறுத்திய பெரு… குற்றச்செயல்களில் பலர் ஈடுபடுவதால் அனுமதி மறுப்பு..!

பெரு நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெனிசுலா நாட்டவர்கள் எல்லையில் தடுத்து விரட்டியடிக்கப்பட்டனர். வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பலர் சிலி நாட்டில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள் நாட்டுக்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால், பெரு வழியாக தான் போக வேண்டும். எனவே, தங்களை பெரு நாட்டுக்குள் அனுமதிக்குமாறு கோரி சிலி-பெரு எல்லையில் ஏராளமானோர் திரண்டனர். ஆனால், வெனிசுலாவுக்கு செல்லாமல், பெருவிலேயே பலர் தங்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று … Read more

சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் – வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன், ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் மூண்டுள்ளது. தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் கடுமையான சண்டை நடக்கிறது. இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் இருந்து வெளிநாட்டினரை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவும் ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் என அமெரிக்காவின் … Read more

பள்ளி பேருந்தை ஓட்டிச் சென்ற போது திடீரென மயங்கிய ஓட்டுநர்… சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய 7ம் வகுப்பு மாணவன்..!

அமெரிக்காவில் பள்ளி பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென மயங்கியதால், 7ம் வகுப்பு மாணவன் பேருந்தை நிறுத்தி சக மாணவர்களை காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை மிச்சிகனில் 66 பள்ளி மாணவர்கள் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நடுவழியில் அசெளகரியத்தை உணர்ந்த பெண் ஓட்டுநர், தனக்கு உடல்நலம் சரியில்லாதது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு திடீரென மயக்கமடைந்தார். இதையறிந்து பேருந்திலிருந்த மாணவர்கள் கத்திக் கூச்சலிட்ட நிலையில், சமயோஜிதமாக செயல்பட்ட 7ம் வகுப்பு மாணவன், பேருந்தை … Read more

காதலர் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த கர்ப்பிணி பெண்

பாங்காக் தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உயிரிழந்த தோழி உள்பட மொத்தம் 13 பேரை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட 13 பேரில் அவரது காதலனும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது. … Read more

Corona: கோவிட் நோயை சீனா எப்படி எதிர்கொண்டது? வரலாற்று புத்தகத்தில் இருப்பது உண்மையா?

‘Covid war’ in history textbook: கோவிட் நோய் ஏற்படுத்திய பாதிப்பை சீனா அருமையாக கையாண்டது என்ற கருத்து உண்மையா? சமூக வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பாடம் சொல்வது என்ன?

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

காத்மாண்டு, நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8,5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்த இந்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை. தினத்தந்தி Related Tags : நேபாளம் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்துள்ளது. அண்டை நாடான சிங்கப்பூருக்கு அருகிலுள்ள தஞ்சங் பினாங் தீவுக்கு 74 பேருடன் படகு சென்றுகொண்டிருந்ததாகவும், புறப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு படகு மரத்தில் மோதியிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. Source link