இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்துள்ளது. அண்டை நாடான சிங்கப்பூருக்கு அருகிலுள்ள தஞ்சங் பினாங் தீவுக்கு 74 பேருடன் படகு சென்றுகொண்டிருந்ததாகவும், புறப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு படகு மரத்தில் மோதியிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. Source link

பாகிஸ்தானில் ரோந்து சென்றபோது 6 போலீசார் சுட்டு கொலை..!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள ஜாபராபாத் பகுதியில் சமீப காலமாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஜாபராபாத் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் மர்ம நபர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது போலீசாருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து … Read more

சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு

உள்நாட்டு மோதலால் சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கார்டூம் நகரமே போர்க்களமாக மாறியது. குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பல பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டுள்ள நிலையில், குறைந்தளவே உணவு பொருட்கள் கிடைப்பாதால், வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.  Source link

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் உள்ள தனது உற்பத்தி ஆலைகளை கசகஸ்தான் நிறுவனத்திற்கு விற்க திட்டமிட்டுள்ளதாக தென் கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலைகளை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், ரஷ்ய அரசாங்கத்தின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் தங்கள் வணிகத்தின் எதிர்காலத்திற்கான பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து வருவதாகவும், இதுவரை எந்த … Read more

கென்யாவில் மக்களின் மொத்த இறப்புக்குக் காரணமான மற்றொரு மதபோதகர் கைது

கென்யாவில் தன்னைப் பின்பற்றியவர்களை மொத்தமாக உயிரிழக்க வைக்க காரணமாக இருந்ததாக மற்றுமொரு மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டின் தென்கிழக்கு நகரமாகிய மாவுவெனி என்ற இடத்தைச் சேர்ந்த மதபோதகர் எஸிகியல் ஒடிரோ. இவர், தான் பணியாற்றிய தேவாலயத்தில் 100க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி, மதபோதகர் எஸிகியல் பணியாற்றிய தேவாலயத்தில் மரணங்கள் நிகழ்ந்ததாக வந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே இறைவனைச் … Read more

தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் – டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல், உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ள டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்கை சந்தித்து பேசினார். 6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தென்கொரியா அதிபர்,  அமெரிக்க தொழிலதிபர்களை சந்தித்து தென்கொரியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். இதன்படி, எலன் மஸ்க்கை தென்கொரிய அதிபர் சந்தித்து பேசினார். அப்போது, தென்கொரியாவில் பேட்டரி தொழிற்சாலைகள் அமைத்தால் வரிச்சலுகைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்க தயார் என கூறினார்.   இந்த … Read more

அரியவகை டால்பின்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தை இரண்டே மாதங்களில் திரும்பப் பெற்ற கம்போடிய பிரதமர்

கம்போடியாவில் அரியவகை டால்பின்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தை, இரண்டே மாதங்களில் அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது. அங்குள்ள மெக்காங் ஆற்றில் கடந்த 1997ஆம் ஆண்டில் 200 அரியவகை இர்ராவடி டால்பின்கள் இருந்துள்ளன. சட்டவிரோத வேட்டை உட்பட பல்வேறு காரணிகளால் படிப்படியாகக் குறைந்து தற்போது 29 டால்பின்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ளவற்றை பாதுகாக்கும் பொருட்டு, டால்பின்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மீன் பிடிக்க தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டு அரசு … Read more

12 நண்பர்களை கொன்ற கர்ப்பிணி கைது| Pregnant woman arrested for killing 12 friends

பாங்காக் :தாய்லாந்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளில், நண்பர்கள் 12 பேரை, ‘சயனைடு’ கொடுத்து கொன்ற கர்ப்பிணியிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரத்தைச் சேர்ந்தவர் சிரிபார்ன் கான்வாங். சுற்றுலா இவர் கடந்த 14ம் தேதியன்று தன் தோழி சாராரத் ரங்சிவதாபார்ன், 32, என்பவருடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சுற்றுலா சென்றார். புத்த வழிபாடு நடத்துவதற்காக அங்குள்ள ஆற்றங்கரைக்கு இருவரும் சென்றனர். அப்போது, சிரிபார்ன் கான்வாங் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது … Read more