பெரு நாட்டின் எல்லைப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனம்

சிலியில் இருந்துவரும் வெனிசுலாவை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நாடு வழியாக செல்வதை தடுக்க பெரு நாட்டின் எல்லைப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளை பலப்படுத்தவும், ஆவணங்கள் இல்லாமல் சிலியில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் புலம்பெயர்ந்தோரை தடுக்கவும் பெரு அதிபர் டினா பொலுவார்ட் உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அவசர நிலையை டினா பொலுவார்ட் அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈக்வடார் வழியாக நுழைந்த 3 முதல் 4 லட்சம் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் … Read more

பிரதமர் மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: ஆஸி.யில் பாகிஸ்தானியர்கள் புகழாரம்

மெல்பர்ன்: பிரதமர் நரேந்திர மோடி இருந்தால் எதுவும் சாத்தியம் என்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்னில் அமைந்துள்ள புன்ஜில் அரண்மனையில் உலக நல்லெண்ணம் தொடர்பான நிகழ்ச்சிக்கு டெல்லி என்ஐடி அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த டாக்டர் தாரிக் பட் (அகமதியா முஸ்லிம் கம்யூனிட்டி) கூறியதாவது. அனைத்து சமூகங்களையும் மதிக்கும் … Read more

உணவு கொண்டுவந்த டெலிவரி பாய் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை..!

அமெரிக்காவில், உணவு கொண்டுவந்த டெலிவரி பாய் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஃபுளோரிடாவை சேர்ந்த ரண்டால் கூக், உபெர் ஈட்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்தார். கடந்த 19ந்தேதி கடைசி டெலிவரியை முடித்து விட்டதாகவும், விரைவில் வீட்டிற்கு வருவதாகவும் கூக் தனது மனைவிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். வெகுநேரம் ஆகியும் கூக் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த மனைவி உபெர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கடைசியாக கூக் டெலிவரி செய்து … Read more

சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில் தமிழருக்கு சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி நேற்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்தப்படுவதற்கு உதவியதாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா (46) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்கராஜு குற்றவாளி என கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் அவருக்கு மரண தண்டனை வழங்கியது. … Read more

சர்வாதிகாரியாக இருந்து 30 ஆண்டுகள் ஆட்சி செய்த சூடான் முன்னாள் ஜனாதிபதி உமர்அல் பசீர் மருத்துவமனைக்கு இடமாற்றம்..

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூடானில், முன்னாள் ஜனாதிபதியும், சர்வாதிகாரியுமான உமர் அல் பசீர், சிறையிலிருந்து ராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1989ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் சூடானை ஆட்சி செய்த உமர், பொதுமக்களுக்கு எதிரான படுகொலைகளை நிகழ்த்தியதாக சர்வதேச நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தலைநகர் கார்ட்டூமில் உள்ள சிறைச்சாலையில் உமர் அடைக்கப்பட்டார். தற்போது ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், 79 வயதான உமரின் உடல்நிலையை … Read more

ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்: 4-வது இடத்தில் இந்தியா!

ஸ்டாக்ஹோம்: 2022-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ கட்டமைப்புக்கான செலவு 81.5 பில்லியன் டாலராக (ரூ.6.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் ராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2020-க்குப் பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராணுவத்துக்கு இந்தியா செலவிடும் நிதி 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் … Read more

இந்திய ரூபாயை பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி| Central Bank of Sri Lanka allows use of Indian rupees

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணியர் உள்ளூர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி இந்திய ரூபாயையே பயன்படுத்தலாம் என அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இலங்கையில் ‘பிக்கி’ எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இலங்கையின் ரிசர்வ் வங்கி கவர்னர் வீரசிங்கே பேசியதாவது: இலங்கையின் மத்திய வங்கி இந்திய ரூபாயில் வர்த்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையை … Read more

சூடானில் இருந்து ‘ஆப்ரேசன் காவேரி’ திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி திரும்பினர்!

உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானில் இருந்து, ‘ஆப்ரேசன் காவேரி’ திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும் இடையே தொடரும் மோதலால் அங்கு சிக்கித் தவித்துவரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ‘ஆப்ரேசன் காவேரி’ என்ற திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்துவந்த இந்தியர்கள் 534 பேர், இரண்டு இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படை கப்பலான சுமேதா மூலம், சூடான் துறைமுகத்தில் … Read more

ஈரான் நாட்டின் சக்திவாய்ந்த மதகுரு சுட்டுக்கொலை

ஈரான் நாட்டின் சக்திவாய்ந்த மதகுருவாக கருதப்பட்ட அப்பாஸ் அலி சுலைமானி சுட்டுக்கொல்லப்பட்டார். ஈரான் அதிபரை நியமணம் செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் ஒருவரான அப்பாஸ் அலி சுலைமானி, அதிபர் அயதொல்லா கமேனியின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார். இந்நிலையில், பபோல்ஸர் (Babolsar) நகரிலுள்ள வங்கிக்கு சுலைமானி சென்றபோது, மர்ம நபர் ஒருவர் பாதுகாவலரிடமிருந்த துப்பாக்கியை பறித்து சுலைமானியை சுட்டுக்கொன்றார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். Source link

இலங் கை சுற்றுலாவில் இந்திய ரூபாயை பயன்படுத்தலாம்!| Indian rupees can be used in Sri Lanka tourism!

கொழும்பு : இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணியர், உள்ளூர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி இந்திய ரூபாயையே பயன்படுத்தலாம் என, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில், ‘பிக்கி’ எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு சார்பில், நேற்று ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற இலங்கையின் ரிசர்வ் வங்கி கவர்னர் வீரசிங்கே பேசியதாவது: இலங்கையின் மத்திய வங்கி, இந்திய ரூபாயில் வர்த்தகம் … Read more