அணு ஆயுதத்தை காட்டி பாகிஸ்தான் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் கனிமொழி எம்.பி. பேச்சு

மாஸ்கோ, பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலும் குறித்து சர்வதேச நாடுகளுக்கு தெளிவாக விளக்குவதற்காக, அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் ஒரு எம்.பிக்கள் குழுவினர் ரஷ்யா சென்றனர். மாஸ்கோ நகரில் ரஷ்ய கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரேருடென்கோவை இந்திய எம்.பிக்கள் குழுவினர் … Read more

24 மணி நேரத்தில் 2-வது முறையாக எக்ஸ் தளம் முடக்கம்!

வாஷிங்டன்: எலான் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் தளம் இன்று மாலை திடீரென முடங்கியது. இந்திய நேரப்படி 6 மணிக்கு பின்பு நீண்ட நேரம் முடங்கியது. இதனால், சமூக வலைதளப் பயனர்களால் செயல்பட முடியவில்லை. சர்வதேச அளவில் எக்ஸ் தளம் வெள்ளிக்கிழமை முடக்கத்தை சந்தித்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் மீண்டும் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய தகவல்களைப் பதிவேற்ற முயற்சி செய்யும்போது, “ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் பதிவேற்ற முயற்சிக்கவும்” என்ற நிலைத்தகவலையே காட்டுகிறது. முன்னதாக நேற்றும் … Read more

துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு

அங்காரா, துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது அதிபர் மாளிகை, நாடாளுமன்ற கட்டிடம் போன்றவை சூறையாடப்பட்டன. இந்த வன்முறையில் சுமார் 290 பேர் கொல்லப்பட்டனர். எனினும் இந்த சதித்திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ராணுவ வீரர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது ஆட்சி … Read more

583 பேருடன் உடலுறவு, அதுவும் 6 மணிநேரத்தில்… கடைசியில் அந்த ஆபாச நடிகைக்கு என்னாச்சு?

World Bizarre News: ஆபாச நடிகை ஒருவர் 6 மணிநேரத்தில் 583 பேருடன் உடலுறவு மேற்கொண்ட நிலையில், கடைசியில் ஆபத்தில் சிக்கி உள்ளார். 

ஹார்வர்டு பல்கலை. விவகாரம்: டிரம்ப் விதித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்தது அமெரிக்க நீதிமன்றம்

வாஷிங்டன், அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது. எனவே டிரம்பின் இந்த தடை சர்வதேச அளவில் கவனம் பெற்றது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், டிரம்பின் உத்தரவை … Read more

மாஸ்கோ மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி குழு சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவினரின் விமானம் மாஸ்கோவில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. 45 நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 10 … Read more

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம்: பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இரு நாடுகளிடையே போர் நடைபெற்றது. அதன்பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன. இதனைத் தொடர்ந்து … Read more

ஹாவர்டு பல்கலை. விவகாரம்: ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

வாஷிங்டன்: ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்து அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் அங்கு பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு நிலை கேள்விக்குறியானது. இந்த சூழலில் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது ஹாவர்டு பல்கலைக்கழக நிர்வாகம். இது சட்ட மீறல் நடவடிக்கை என நீதிமன்றத்தில் வாதம் … Read more

ராணுவ தளபதியுடன் கருத்து வேறுபாடு: வங்கதேச தலைமை ஆலோசகர் ராஜினாமா?

டாக்கா: வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் மீண்டும் வெடித்தால் வங்கதேசத்தில் மீண்டும் கலவர சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம், முகமது யூனுஸை ஜமுனாவில் உள்ள அதிகாரப்பூர்வமான இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து … Read more

ரஷியா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடை – ஜி7 கூட்டமைப்பு எச்சரிக்கை

ஒட்டாவா, உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 184வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் – ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் 15ம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போரை முடிவுக்கு கொண்டு … Read more