இத்தாலியில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளுக்கு தடை?

இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் இத்தாலியை சேர்ந்தவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்தின்போது ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு மொழியை பயன்படுத்தினால் ஒரு லட்சம் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி … Read more

கல்லூரி மாணவர்கள் மாணவிகள் காதல் செய்ய விடுப்பு: சீனாவில் அதிரடி ஆபர்| China’s Colleges Give Students 7-Day Break ‘To Fall In Love’ As Birth Rate Plummets

பீஜிங்: சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்த நிலையில், காதல் செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரியத் துவங்கியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், மிக மோசமான மக்கள் தொகை சரிவை நாடு சந்தித்து வருவதாக சீன அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக, வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம், நுகர்வோர் தேவையில் சுணக்கம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட சிக்கல்களில் சீனா சிக்கியுள்ளது. … Read more

அமெரிக்காவில் சூறாவளி 26 பேர் பலி; பலர் படுகாயம்| 26 killed in hurricane in America; Many were seriously injured

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதியான அர்கான்சஸ், இலினாய்ஸ் மாகாணங்களில் கடும் சூறாவளி காற்று வீசியதில் 26 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தின் லிட்டில் ராக் பகுதியை நேற்று முன்தினம் பலத்த சூறாவளி தாக்கியது. வீசிய சூறைக்காற்றில், சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன; ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொது மக்களின் இயல்பு … Read more

வாயுவை வெளியேற்றும் நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை.. வெடிக்க வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

கொலம்பியாவில் உள்ள நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை, வாயுவை வெளியேற்றி வருவதால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோலிமா மற்றும் கால்டாஸ் மாகாண எல்லையில் உள்ள இந்த எரிமலை கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வாயுவை வெளியேற்றி வருகிறது. வரும் நாட்களில் எரிமலை வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக கொலம்பிய புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 1985ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட்டதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர் … Read more

இந்திய – சீன எல்லைப் பகுதியில் நிலைமை சீராக இருப்பதாக சீனா தகவல்!

இந்திய, சீன எல்லைப் பகுதியில் அவசரகால கட்டுப்பாடுகள் முடிந்து விட்டதாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான சீன தூதரக அதிகாரி சென் ஜியான்ஜூன், இந்தியாவுடனான உறவை நீண்டகால கண்ணோட்டத்தில் சீனா பார்ப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இருதரப்பு உறவுகள் பல சிரமங்களை எதிர் கொண்டாலும், சீனாவில் நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை என்றும் சென் குறிப்பிட்டார். ஜி20 மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர் பதவியில் இந்தியா தனது பங்கை … Read more

மத்திய, மேற்கு அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட பெரும் புயல்.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

மத்திய அமெரிக்காவில் தாக்கிய புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதியில் வீசிய சூறாவளியால் 7 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் காரணமாக அலபாமா, இல்லினாய்ஸ், மிசிசிப்பி மற்றும் லிட்டில் ராக் பகுதியில் இடி மின்னலுடன் கடும் மழை கொட்டித் தீர்த்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்காண மக்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இல்லினாய்ஸின் பெல்விடேரில் வீசிய சூறாவளி அப்பல்லோ தியேட்டரின் கூரையை விசிறியடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். Source … Read more

ரஷ்யா, உக்ரைன் இடையே அதிகரித்துள்ள ட்ரோன் தாக்குதல்கள்.. எதிரி வீரர்களைக் கண்டறிந்து, டேங்குகள் மீது குண்டு வீசும் ட்ரோன்கள்!

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிநவீன ட்ரோன்கள் மூலம் அதிகப்படியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த ஒரு வருடத்தில், ,இத்தகைய ட்ரோன்கள் போரின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர் நாட்டு வீரர்கள் பதுங்கியிருக்கும் இடங்களைக் கண்டறிதல், டேங்குகள் மீது சிறிய குண்டுகளை வீசி பெரும் சேதத்தை விளைவித்தல் போன்றவை ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் முன்னணித் தாக்குதல்களாகும். க்ரோன்ஸ்டட், ஆர்லன் 10, எலரான் 3 உள்ளிட்ட ட்ரோன்கள் … Read more

உக்ரைனில் நடைபெற்ற போர்க்காலக் குற்றங்களுக்கு புதினை பொறுப்பேற்க வைப்போம் – உக்ரைன் அதிபர்

உக்ரைனில் நடைபெற்ற போர்க்காலக் குற்றங்களுக்கு புதினை பொறுப்பேற்க வைப்போம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் பொதுமக்களிடம் காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் மீது சரமாரியான புகார்களைக் கூறினார். ரஷ்ய கொலையாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை விதிக்கப்படும் என்று அப்போது ஜெலன்ஸ்கி ஆவேசமாகக் கூறினார். ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தில் வலியுறுத்தி வருவதாகக் கூறிய ஜெலன்ஸ்கி, போர்க்காலக் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க முயற்சி எடுத்திருப்பதாக தெரிவித்தார். … Read more

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 15 பழங்கால சிலைகள் திரும்ப ஒப்படைப்பு!

இந்தியாவிலிருந்து, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரால் கடத்திச் செல்லப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 15 சிலைகளை திரும்ப ஒப்படைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சுபாஷ்கபூருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று கிமு 1ம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு வரையிலான செம்பு சிலைகள், கற்சிலைகள் மற்றும் சுடுமண் சிலைகளை திரும்ப வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link