நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் – முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

நியூயார்க்: ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான … Read more

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட 6 பேர் பலி!

கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட ஆறு பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தியா மற்றும் ரோ மேனியா நாடுகளை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர். கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்தபோது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து அதில் இருந்தவர்கள் ஆற்றில் அடித்துசெல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், ஆற்றில் மாயமான குழந்தையை தேடும் பணி … Read more

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் – கூகுள் முன்னாள் விஞ்ஞானி கணிப்பு

புதுடெல்லி: இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறினார். அது சரியாக இருந்தது. அதேபோல் … Read more

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் – கூகுள் முன்னாள் விஞ்ஞானி கணிப்பு

புதுடெல்லி: இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கம்ப்யூட்டர் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறினார். அது சரியாக இருந்தது. அதேபோல் … Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு| Criminal charge filed against Trump over payment to porn actress

நியூயார்க், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றம் கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இதன் வாயிலாக, கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் என்ற அவப்பெயர், டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 76, கடந்த, 2017 – 21 வரை, அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். அமெரிக்காவில் மிகப் பெரிய தொழிலதிபராக ஏற்கனவே மக்கள் மத்தியில் … Read more

கட்டாய மத மாற்றத்திற்கு எதிர்ப்பு பாக்.,கில் ஹிந்துக்கள் போராட்டம்| Hindus protest against forced religious conversion in Pakistan

கராச்சி, பாகிஸ்தானில், ஹிந்து சிறுமியரை கடத்தி, கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்யும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் மற்றும் பெண்களை, வலுக்கட்டாயமாக, முஸ்லிம் மதத்திற்கு மத மாற்றம் செய்து, திருமணம் செய்யும் சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு, அங்குள்ள ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, கராச்சியில், சிந்து சட்டசபை கட்டடத்தில் … Read more

நாசாவின் நிலவு – செவ்வாய் திட்டம் தலைமை பொறுப்பில் இந்தியர்| Indian to lead NASAs Moon-Mars programme

வாஷிங்டன்,’நாசா’வின் நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன்ஜினியர் அமித் ஷத்ரியா நியமிக்கப்பட்டு உள்ளார். நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம், விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தை நாசா துவக்கி உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘ரோபாட்டிக்ஸ்’ இன்ஜினியர் அமித் ஷத்ரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது … Read more