653 துப்பாக்கி குண்டுகள் மாயமான வடகொரிய ஹைசன் நகரில் ஊரடங்கு அமல் – கிம் ஜாங் அன்

வடகொரியாவில் சீன நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் வடகொரியா ராணுவத்தின் 7-வது படை பிரிவினர் எல்லை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் ஹைசன் நகரில் இருந்து திரும்ப தொடங்கினர். அப்போது ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தாங்களாகவே மாயமான துப்பாக்கி குண்டுகளை தேடினர். ஆனால் பல நாட்களாக தேடியும் அவர்களால் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்க … Read more

அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள மொஜாவே பாலைவனப் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரயில் பாதையான கெல்சோ டிப்போவுக்கு அருகில் இரும்பு தாதுகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. தெற்கு நோக்கிச் சென்ற ரயிலின் இரண்டு என்ஜின்கள் மற்றும் 55 பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றின் மீது ஒன்று விழுந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விபத்தில் உயிரிழப்புகள் இல்லையெனவும், தண்டவாளம் உடனடியாக சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது டிஸ்னி நிறுவனம் !

வாஷிங்டன், உலகின் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, தனது நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாகவும், எதிர்பார்த்த லாப இலக்கை அடைய முடியாதது உள்ளிட்ட காரணங்களாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 7 ஆயிரம் பணி இடங்களை குறைப்பதற்கான கடினமான முடிவை நாங்கள் … Read more

அமெரிக்காவின் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு..!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவசர சேவைகளை தொடர்புகொண்ட பெண், தன்னை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக கூறியுள்ளார். அவனை பிடிக்க வந்த 2 போலீசாரை நோக்கி அவன் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். துப்பாக்கி சூடு நடத்தியவனை போலீசார் பின்னர் கைது செய்தனர். அதே போல் ஓஹியோ மாநிலத்திலுள்ள ஒரு ஜிம்மில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். திங்கட்கிழமை டென்னிசி … Read more

வரலாறு காணாத மக்கள் போராட்டம்: இஸ்ரேலில் என்ன நடக்கிறது..? – ஒரு தெளிவுப் பார்வை

கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வரலாற்றில் பதியும் மாபெரும் போராட்டத்தை இஸ்ரேல் மக்களும், எதிர்க்கட்சிகளும் அந்நாட்டில் முன்னெடுத்திருக்கிறார்கள். டெல் அவிவ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திக் கொண்டிருக்கும் இப்போராட்டங்கள் ‘இஸ்ரேலில் என்ன நடக்கிறது..?’ என உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஏன் இந்த போராட்டம்? – இஸ்ரேலில் நீதித் துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு ஈடுபட்டு வருகிறார். அதாவது, நீதித் துறையின் … Read more

இந்திய தூதரகங்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம்..!

சான்பிரான்சிஸ்கோ, ஒட்டாவா நகரங்களில், இந்திய தூதரகங்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் மீதான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் ஒருவித அச்ச உணர்வில் இருப்பதாக, வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் பட்டேல், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையை கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது என்றார். ஒருநாட்டில் தூதரகப்பணிகளை மேற்கொள்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வியன்னா ஒப்பந்தப்படி, அமெரிக்காவிலுள்ள … Read more

கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை நடத்திய ரஷ்யா..!

கப்பலில் இருந்து மற்ற கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. ஜப்பானிய கடல் எல்லைக்கு வெளியே உள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரஷ்ய போர்க் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட மொஸ்கிட் குரூஸ் வகை ஏவுகணைகள் 60 மைல்களுக்கு அப்பால் இருந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. Source link

ஆப்கான் அகதிகளை வீடுகளுக்கு மாற்ற இங்கிலாந்து அரசு புதிய சலுகை..!

இங்கிலாந்தில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் வீடற்றவர்களாக மாறக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூலில் இருந்து தப்பி ஓடிய சுமார் 9,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் முதல் சலுகையை ஏற்றுக் கொண்டால் கடந்த 18 மாதங்களாக தற்காலிக ஹோட்டல் தங்குமிடங்களிலிருந்து வெளியேற்றி நிரந்தர வீடுகளுக்கு மாற்றப் போவதாக அறிவித்தது. ஹோட்டல்களில் இருப்பவர்கள் குடியேற ஏப்ரல் மாதம் கடிதங்களைப் பெறத் தொடங்குவார்கள் என்றும் … Read more

போலி மருந்துகளைத் தயாரித்ததற்காக நாடு முழுவதும் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து..!

போலி மருந்துகளைத் தயாரித்ததற்காக நாடு முழுவதும் 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. போலியான மருந்துகளைத் தயாரிப்பது தொடர்பாக தமிழ்நாடு உள்பட 20 மாநிலங்களில் உள்ள மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான மரியன் பயோடெக் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று மூத்த ஊழியர்கள், கலப்பட மருந்துகளை தயாரித்து விற்ற குற்றச்சாட்டின் பேரில் … Read more

பூமிக்குத் திரும்பும் வழியில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கல கேப்சூல் சேதம்..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமிக்கு வந்த ரஷ்யாவின் சோயுஸ் விண்கல கேப்சூல் சேதமடைந்தது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பிரிந்த பின், சோயுஸ் எம்எஸ்-22 என அழைக்கப்படும் இந்த கேப்சூல் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து கஸாக் புல்வெளியில் தரையிறங்கியது. அப்போது காப்சூலின் குளிரூட்டியில் விழுந்த துளை காரணமாக சேதமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய விண்கல் கட்டமைப்பைத் தாண்டி வரும் போது குளிரூட்டி சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கேப்சூலின் உள்பகுதியில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் … Read more