நீருக்கு அடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்த வட கொரியா.?

நீருக்கு அடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்து இருப்பதாக வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், வரம்பற்ற அணுசக்திப் போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா- தென் கொரியப் படைகள் கடல் எல்லையில் கூட்டாகப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் வட கொரியா நீருக்குள் சென்று அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்து இருப்பது முக்கியத்துவம் … Read more

ஏர்போர்ஸ் ஒன் பாதுகாப்பு சான்றுகள் குறித்து பென்டகன் ஆய்வு..!

ஏர் ஃபோர்ஸ்-1  போயிங் பாதுகாப்புச் சான்றுகளில் தவறியதை பற்றி அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆய்வு செய்து வருகிறது.  ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களில் பணிபுரியும் சுமார் 250 ஊழியர்களுக்கு வழங்கப்படும் “யாங்கி ஒயிட்” எனப்படும் அமெரிக்க குடியுரிமை மற்றும் நம்பகத்தன்மை தொடர்பான சான்றுகள் காலாவதியானதை மார்ச் 14 அன்று போயிங் நிறுவனம் கண்டுபிடித்தது. “இந்த நிர்வாக சிக்கலை போயிங் கண்டறிந்ததும், நாங்கள் விமானப்படைக்கு விரைவாக அறிவித்ததாக போயிங் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.  Source link

இந்தியத் தூதரகம் மீதான காலிஸ்தான் ஆதரவாளர்களின் தாக்குதல்.. பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையுடன் ஆலோசித்து வருவதாக அரசு அறிவிப்பு..!

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இந்தியத் தூதரகம் மீதான வன்முறையை ஏற்க முடியாது என்று உறுதியுடன் தெரிவித்தார். தூதரக ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டுத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது முதன்மையான பணியாகும் என்றும் ஜேம்ஸ் கிளவர்லி கூறியுள்ளார். Source … Read more

பாதுகாப்பு காரணங்களுக்காக ‘டிக்டாக்’ செயலிக்கு இங்கிலாந்தில் தடை..!

இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, கனடா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட சில ஐரோப்பியநாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில், இங்கிலாந்து அரசின் முக்கிய தகவல்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கே முன்னுரிமை என்றும் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் சீன வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தங்கள் சொந்த தொலைபேசிகளில் … Read more

தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சட்டவிரோதமாக நுழைந்ததாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்கா

தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சட்டவிரோதமாக நுழைந்ததாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அர்லீக் பர்க் வகை தாக்குதல் கப்பலான யு.எஸ்.எஸ் மிலியஸ் கடந்த சில தினங்களுக்கு முன், தென் சீன கடலில் ரோந்து வந்தது. அதனை சீன கடற்படை சட் டத்தின்படி விரட்டி அடித்ததாகவும், இதனால் தென் சீன கடல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை குலைப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில், யுஎஸ்எஸ் மிலியஸ் … Read more

8 அடி 3 அங்குல நீளத்துக்கு தாடி வளர்த்து சொந்த கின்னஸ் சாதனையை மீண்டும் முறியடித்தார் கனடா சீக்கியர்

ஒட்டவா: ஸ்வீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்ததுதான் கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ம் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்தார். அப்போது அவரது தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன்பின் கடந்த 2010-ம் ஆண்டில் இவரது தாடியை இத்தாலியில் நடந்த நிகழ்ச்சியில் அளந்தபோது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்திருந்தது. கடந்தாண்டு … Read more

இத்தாலியில் ஆழ்கடலில் சிக்கித் தவித்த 700 அகதிகள் பத்திரமாக மீட்பு..!

தெற்கு இத்தாலி கடற்பகுதியில் படகு பழுதாகி ஆழ்கடலில் சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலி கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக கடல்வழி பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற படகு துனிசிய கடற்கரை பகுதியருகே மூழ்கியதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 33 பேர் மாயமாகினர். இதையடுத்து கலாப்ரியா கடற்பகுதியில் படகு ஒன்றில் இருந்த 295 அகதிகளும், சிசிலியன் தீவான … Read more

இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றம்| Passage of Controversial Law in Israel

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெல் அவிவ்-இஸ்ரேலில் நீதித் துறையில் மறுசீரமைப்பை உருவாக்கும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் முதல் சட்டம், அந்நாட்டு பார்லிமென்டில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மேற்காசிய நாடான இஸ்ரேலில் நீதித் துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் இடையே சம நிலையை மீட்டெடுக்கவும், நீதித் துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். ‘இது, ஜனநாயகத்துக்கு எதிரான செயல்’ என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் … Read more

3 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு வீட்டிற்குள் பதுங்கிய இளைஞரை சுட்டு கொன்ற ‘கமாண்டோ’ படையினர்

தாய்லாந்தில், 3 பேரை சுட்டு கொன்றுவிட்டு வீட்டில் பதுங்கிய நபரை 14 மணி நேர போராட்டத்திற்கு பின் கமாண்டோ படையினர் சுட்டு கொன்றனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அனுவாட் என்ற 29 வயது இளைஞனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், தன்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டு நபர்கள் 2 பேரையும், ஒரு டெலிவரி பாயையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, வீட்டின் 2ஆம் தளத்தில் அவன் பதுங்கிகொண்டான். போலீசார் அவனது தாயாரை வரவழைத்து, மெகாபோன் … Read more