சீன அதிபர் மார்ச் 20-ல் ரஷ்யா பயணம்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி

பெய்ஜிங்: மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதன் ஓராண்டு நிறைவை ஒட்டி சீன அரசு தரப்பில் கடந்த மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முழுமையான போர் நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைத்து … Read more

வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட மலை கிராமம்.. 32 பேர் பலி : 18 பேரைக் காணவில்லை

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கனமழையால், வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரு மலைக்கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் அருகிலுள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலாவி நாட்டை புரட்டிப் போட்ட ஃப்ரெடி புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 326ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

உருளைகிழங்குடன் இதயத்தை சமைத்த கொலைக்காரன்… உறவினர்களையே குத்திக்கொன்ற கொடூரம்!

Shocking Crime: 44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன் 2021ஆம் ஆண்டில் பல கொடூரமான கொலைகளைச் செய்தார். இந்த கொடூர கொலைகளுக்கு தற்போது அவருக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 வயது குழந்தை, ஒரு பெண் உள்பட மூன்று பேரை கொலை செய்துள்ளார். இவரின் கொடூர தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்த அவரின் அத்தை தற்போது இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ளார். ஆண்டர்சன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த … Read more

அமெரிக்காவில் 3 பேரை படுகொலை செய்த சைகோ கொலைகாரனுக்கு 75 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவில், பெண்ணை படுகொலை செய்து, அவரது இதயத்தை சமைத்து உறவினர்களுக்கு பரிமாறி, பின் அவர்களையும் கொலை செய்த கொடூரனுக்கு 75 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 44 வயதான லாரன்ஸ் பால், சிறையிலிருந்து விடுதலை ஆன சில வாரங்களிளேயே பக்கத்து வீட்டில் வசித்த ஆன்டிரியா என்பவரை கொலை செய்து, அவரது இதயத்தை வெட்டி எடுத்து, மாமா வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளான். அங்கு அதனை சமைத்து, வீட்டில் இருந்தவர்களுக்கு பரிமாறியுள்ளான். பின் தனது மாமாவையும், 4 வயதே ஆன … Read more

சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து புதிய உலக சாதனை படைத்த அலைச்சறுக்கு வீரர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்பகுதியில் முன்னாள் அலைச்சறுக்கு வீரர் பிளேக் ஜான்ஸ்டன் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து புதிய சாதனை படைத்தார். சிட்னியின் தெற்கில் உள்ள க்ரோனுல்லா கடற்கரையில் அலைச்சறுக்கை நிறைவு செய்து கரைக்கு திரும்பிய ஜான்ஸ்டனை அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் ஜோஷ் என்ஸ்லினின் முந்தைய சாதனையான 30 மணி நேரம் 11 நிமிடங்கள் அலைச்சறுக்கு சாதனையை ஜான்ஸ்டின் முறியடித்தார். Source link

ஆப்ரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி புயலால் 326 பேர் உயிரிழப்பு

லிலோங்வே: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை 326 பேர் பலியாகினர். புயல் பாதிப்பு குறித்து மலாவி தேசிய பேரிடர் மேலாண்மை கூறும்போது, “பிரெட்டி புயலால் மலாவியின் தென்பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. பல மாவட்டங்கள் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. புயலுக்கு இதுவரை 326 பேர் பலியாகி உள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் பாதிப்பு குறித்து மலாவியைச் சேர்ந்த … Read more

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை புகைப்படங்களை வெளியிட்ட வடகொரியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்ட புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது. அமெரிக்கா-தென்கொரியா இடையே கடந்த 13-ம் தேதியில் இருந்து மிகப்பெரிய அளவிலான கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் வகையில் வட கொரியா நேற்று Hwasong-17 எனப்படும் வடகொரியாவின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. அந்த புகைப்படங்களை வடகொரியா அரசு ஊடகம் தற்போது வெளியிட்டுள்ளது. ICBM ஏவுகணை சோதனையை அதிபர் … Read more

திவாலாகும் நிலையிலும் விடாத காஷ்மீர் மோகம்… OIC கூட்டத்தில் பிதற்றும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதோடு பயங்கரவாத தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், காஷ்மீர் மீதான் பேராசை குறையவில்லை. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் பேச்சு இதனை மீண்டும் உறுதி படுத்தியுள்ளது. காஷ்மீர் குறித்து பிலாவல் மீண்டும் ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். இம்முறை அவர் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் (OIC) தளத்தை இதற்காக தேர்வு செய்துள்ளார். காஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டத்திற்கு பாகிஸ்தான் எப்போதும் இராஜதந்திர, அரசியல் மற்றும் தார்மீக ஆதரவை வழங்கும் என்று பிலாவல் இந்த … Read more

வாஷிங்டன் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியது..!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியது. அனகார்டெஸ் அருகே உள்ள ஸ்காகிட் கவுண்டியில் நள்ளிரவில் சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டீசல் நிலப்பரப்பில் கொட்டியநிலையில், நீர் அல்லது வன விலங்குகளின் பாதிப்புகள் குறித்த எந்த அறிகுறியும் தற்போது இல்லை என வாஷிங்டன் மாநில சூழலியல் துறை தெரிவித்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  Source link

TikTok மீது நியூசிலாந்து எம்.பிக்களின் வழங்கப்படும் சாதனங்களுக்கு டிக்டாக் அரசு தடை

TikTok Ban: பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில், நியூசிலாந்து நாடும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடை, சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் பொருந்தும். நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சாதனங்களில் இருந்து டிக்டாக் தடை செய்யப்படுகிறது. மார்ச் 31-ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. சீனாவுக்குச் … Read more